கௌரவக் கொலைகள்


உங்களுக்கு கொலை செய்தல் என்றால் தெரிந்திருக்கும், அதென்ன கௌரவக்கொலை, தமிழகத்தில் தற்போது அதிகரித்துவரம் பயங்கரம். தினசரிகளில் படித்திருப்பீர்கள் வயிற்றுவலியால் பெண் தற்கொலை, பெண்மாயம்,கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை என்ற செய்திகள் அவற்றுக்கு பின்னால் மறைந்திருப்பது தான் இந்த கௌரவக்கொலைகள். ஜனநாயக மாதர்சங்கத்தை சேர்ந்த உ.வாசுகியின் கட்டுரையை உங்கள் முன் விவதாத்திற்கு வைக்கிறோம்...

நாகை மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு பயங்கரம் நடந்திருக்கிறது. வேதா ரண்யம் அருகே, வண்டல் கிராமத்தில், ஒரு தலித் இளைஞனும், வேறு சாதி யைச் சேர்ந்த இளம் பெண்ணும் தொடர்பு வைத்திருந்ததாகவும், ஊர் மக் களில் ஆத்திரமடைந்த சிலர் ஒன்று சேர்ந்து, சித்ரா என்ற 29 வயதே ஆன அந்தப் பெண்ணை அடித்தே கொன்று விட்டதாகவும், மாதவன் என்ற அந்த இளைஞனையும் தூக்கில் தொங்கச் சொல்லி உத்தரவு போட்டதாகவும், குடிசை என்பதால் உயரமும், உத்திரமும் பிரச்சனை ஆனதால், தூக்கு நாடகத்தை அரங்கேற்ற முடியாமல், சாலையிலே போட்டுத் தாக்கியதாகவும், அப்போது வந்த போலீஸ்காரர்கள் மாதவனைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த தாகவும் சம்பவங்கள் விரிகின்றன. இரு வருமே வெவ்வேறு திருமணம் செய்து குழந்தைகள் இருப்பவர்கள், விஷயம் வெளியே தெரிந்துவிட்டதால், அவ மானமடைந்து, சித்ரா தூக்கில் தொங்கி விட்டாள் என்று விசாரணையில், உள் ளூரில் சிலர் கூறியுள்ளனர். காவல் துறை மூடி மறைக்க முயற்சிப்பதாகவும் தெரிய வருகிறது.

சாதிய வக்கிரம்


மேற்கூறிய பிரச்னையில், திருமணத்தைத் தாண்டிய உறவு என்பது உண்மை யாக இருக்கலாம். ஆனாலும், அது சம் பந்தப்பட்ட குடும்பங்கள் கையாள வேண்டிய பிரச்சனை. சட்டம் இருக் கிறது, நீதிமன்றம் இருக்கிறது, அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். மற்றவர்கள் யார் தீர்ப்பெழுத?மனைவியைத் தாண்டி, பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த ஆண்கள், பெரிய தனக் காரர்கள் எத்தனை பேர்? அவர்களால் குடும்ப கௌரவம் அழியவில்லையா? இப்போதும் அப்படியான நடைமுறை தொடர்கிறதே? குடும்பமோ, ஊர் மக் களோ கொதித்தெழுந்து, கௌரவம் போய் விட்டதென்று ஒப்பாரி வைக் கிறார்களா, இல்லையே?

அப்படியானால், எது பிரச்சனை? எதில் குடும்ப கௌரவம் போவதாகக் கருதப்படுகிறது? சாதியில் தானே? அதுவும், பெண் ‘உயர்’ சாதியாக இருந்து, ஆண், தலித் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்கும்போது தான், கௌரவப் பிரச் சனை வருகிறது. ஆண், வேறு சாதியாக இருந்து, பெண் தலித்தாக இருந்தால், அது, அந்த ஆணின் ஆண்மையை அல் லது ஆளுமையைக் குறிப்பதாகப் பார்க் கப்படுகிறது. தலித் பெண்களை உடமை யாகப் பார்க்கும் பார்வையும் இதில் அடங்கும்.

உயர் சாதி ஆதிக்க சமூக அமைப் பில், பெண்தான், சாதி தூய்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறாள். இதர சாதியுடன் உறவு என்பது, அவ ளைத் தீட்டுப்படுத்துவதாகவும், எனவே சாதியும் கெட்டுப் போவதாகவும் கருதப் படுகிறது. சாதியை நிலைநாட்ட, அவள் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகி றாள். வாரிசைப் பெற்றுக் கொடுக்கும் இடத்தில் இருக்கும் அவள் தான், கற்போடு இருக்க வேண்டும். கணவன் யாரிடம் போய் விட்டு வந்தாலும் பரவாயில்லை, அவனோடு குடும்பம் நடத்தி, அவனுக்கான வாரிசை, சாதியின் அடையாளமாகப் பெற்றுத் தருவது பெண்ணின் கடமை என்ற கடந்த காலத்தின் மிச்ச சொச்சங்களின் தொடர்ச்சியல்லவா இது?

சாதி முறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, மக்களின் மன உணர்வு பதப்படுத்தப்படுகிறது, தயாரிக் கப்படுகிறது. கருத்தியல், காலம் கால மாய் காப்பாற்றப்படுகிறது. அதை மீறு வது, பெற்ற மகளாக இருந்தாலும், கூடப் பிறந்த சகோதரியாக இருந்தாலும், அடுத்த வீட்டுப் பெண்ணானாலும், சொந்த பந்தமாக இருந்தாலும் போட்டுத் தள்ளத் தயங்காத வெறி கொண்ட மன உணர்வு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பதியன் போடப்படுவது தான் கௌரவக் கொலைகள், குற்றங்கள் !

தனிச் சட்டம் தேவைஇவை, தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருவது ஆபத்தானப் போக் காகும். சில மாதங்களுக்கு முன்பு, சிதம் பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத் தின் பொறியியல் கல்லூரி மாணவியை, அவரது அப்பா, கல்லூரி வாசலிலேயே வெட்டினார். சில வருடங்களுக்கு முன்பு, மதுரையிலிருந்து, ரூ.1 லட்சம் கொடுத்து, கூலிப்படையை அனுப்பி, சென்னை யில், தலித் இளைஞனைத் திருமணம் செய்த மகளைக் கொல்ல ஏற்பாடு செய் தார் தந்தை. சென்னை செங்குன்றத்தில், காவல் நிலையத்தில் சரணடைந்த மகளை, அங்கேயே வைத்துக் கழுத்தை அறுத்தார் அவள் தந்தை. பல வருடங் களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில், சாதி மறுப்பு திருமணம் புரிந்த கண் ணகி-முருகேசன் என்ற இளம் தம் பதியை, கண்ணகியின் தந்தை விஷம் கொடுத்துக் கொலை செய்து எரித்தார். இதில் சாதிய ஆதிக்க வெறி முதன்மை யாக வருகிறது. அடுத்து, விருப்ப அடிப் படை திருமணம் பலிகடா ஆகிறது. ஒரு பெண், தனது துணையைத் தேர்ந்தெடுத் துக்கொள்ளக் கூடாது என்கிற ஆணா திக்க உணர்வும் பங்கு வகிக்கிறது. தெரிந்த சம்பவங்கள் குறைவு. தெரி யாமல் நடக்கிற, தற்கொலை என்று மூடி மறைக்கப் படுகிற சம்பவங்கள் எத் தனையோ?

பெண்ணின் மீதான வன்முறை, கணவன் வீட்டில் நடந்தால், பெற்றோர் அல்லது உற்றார் உறவினர், புகார் கொடுப் பார்கள். கௌரவக் குற்றங்களில், பெண் ணின் குடும்பமே ஈடுபடுவதால், குரல் கொடுக்க ஆள் இல்லை; வாய்ப்பும் இல்லை. எனவே தான், இவற்றைக் கணக்கில் எடுத்து ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கம் குரல் கொடுக்கிறது. நாடு தழுவிய அளவில் ஒரு கையெழுத்து இயக்கத்தையும் நடத்தியது. இளம் பெண் களின் சந்தேக மரணங்களில், இத் தகைய சாதி மறுப்புக் காதல், உறவு, திரு மணம் இருந்ததா என்ற கோணத்தில், காவல்துறை விசாரணை அமைய வேண்டும் என்பது உட்பட கோரப்பட் டுள்ளது. ‘உயர்’ சாதி ஓட்டு போய் விடுமே என்ற குறுகிய அரசியல் பார் வையால், மத்திய அரசு தள்ளிப் போட் டுக் கொண்டிருக்கிறது. .

இதற்கிடையேதான், உத்தரப்பிர தேசத்தில், தனது 14 வயது மகளைக் காணவில்லை எனப் புகார் கொடுக்க வந்த ஒருவரிடம், உயர் போலீஸ் அதிகாரி “உன் மகள் ஓடிப் போயிருப்பாள். ஒரு வேளை, எனது மகள், இவ்வாறு வேறு சாதி ஆளுடன் வீட்டை விட்டுப் போயி ருந்தால், நான் அவளை சுட்டுக் கொன் றிருப்பேன்” என்று கூறியிருக்கிறார். கௌரவக் குற்றம் செய்யத் தூண்டுவது தானே இது? அதிகாரியின் பேச்சு, வெளியே தெரிந்து, பெரும் பிரச்சனை யாகி, அரசு தலையிட வேண்டிய நிர்ப்பந் தம் ஏற்பட்டு, தற்போது அவர் மீது நட வடிக்கைக்கு ஏற்பாடு உள்ளது. குற் றங்களைத் தடுக்க வேண்டிய காவல் துறையிலேயே பாலின பாகுபாடும், நில வுடைமை கருத்தாக்கங்களும் ஊறிப் போயிருப்பதன் வெளிப்பாடே இத் தகைய சம்பவங்கள்.

கௌரவக் கொலையும், குற்றமும் ஒரு நாகரீக சமூகத்தில் வெறுக்கத் தக்க நட வடிக்கைகள். இதை ஒருபோதும் அனுமதிக் கலாகாது. சம நீதிக்கும், சமூக நீதிக் கும் ஒருசேர வேட்டு வைக்கும் இக் கொடுமை வேரோடும், வேரடி மண் ணோடும் அழிக்கப்பட, தனி சட்டக் கோரிக்கை நிறைவேற களமிறங்கி செயல்பட வேண் டும்.
-உ. வாசுகி

ஹாலிவுட்டில் கௌரவக் கொலை 

இந்தியாவில் இருவேறு சாதிகளை சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டால் சம்பந்தப்பட்ட காதலர்களின் குடும்பத்தினர்களாலேயே அவர்கள் படுகொலை செய்யப்படும் கொடூரம் நிகழ்த்தப்படுகிறது. தமிழகத்தில் இத்தகைய சம்பவங்கள் பெருமளவிற்கு வெளியுலகிற்கு தெரியவராத நிலையில் , வட இந்திய மாநிலங்களில் அப்பட்டமாக இக்கொலைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இத்தகைய படுகொலை கள் பல்வேறு கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து அமைப்பு களின் அனுமதியுடன் அரங்கேற்றப்படுகிறது.இந்நிலையில் இக்கௌரவக் கொலைகளை மையமாக வைத்து தி டிபியெண்ட் என்ற பெயரில் ஹாலிவுட் இயக்குநர் பில்பென்னெட் இயக்கத்தில் திரைப்படம் ஒன்று தயாராக உள்ளது. இந்தியாவில் தயாராகி ஆஸ்கர் விருதை குவித்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் கதாநாயகனாக நடித்த தேவ் பட்டேல் என்பவரே இப்படத்திலும் நாயகனாக நடிக்க உள்ளார்


உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்