நாம் ஏன் தமிழில் பேச வேண்டும் ? கமல் பேட்டி


தமிழர்களாகி நாம் முழுமையாக தமிழில் பேசுகிறோமா? என்றால் வெட்கத்தோடு இல்லை ஏன்றுதான் பதில் சொல்லியாக வேண்டும்.  எனது நண்பரின் மகளுக்கு எண்களை ஆங்கிலத்தில் சொன்னால் புரிகிறது, தமிழில் சொன்னால் சுத்தமாக புரிவதில்லை, தமிழ் படிக்காமல் பள்ளிபடிப்பை முடித்து வெளிவரும் தமிழர்களின் குழந்தைகள் அதிகரித்து வருகிறார்கள்.


இங்கு அன்றாட வாழ்க்கையில் நாம் இல்லங்களிலும், பொது இடங்களிலும் உபயோகிக்கும் வார்த்தைகளைப் பாருங்கள். காலை முதல். . . குட்மார்னிங், டீ, பேப்பர், பேஸ்ட் பிரஷ், சோப்பு, டிபன், பஸ் ஸ்டாண்டு, டிக்கெட், ஸீட், ஸ்டாப்பிங், ஆபிஸ், லன்ஞ், ஸ்கூல், வாட்டர் பாட்டில், புக்ஸ், ரேஷன், மார்க்கெட், கடைகளின் பெயர்ப் பலகையில் ஆங்கிலம், நிறுவனங்களின் பெயர்கள் என்றெல்லாம் பட்டியல் நீள்கிறது. ஈவ்னிங், டீ, டிவி, போன், ஃபேன், லைட், இறுதியாக குட் நைட் சொல்லிவிட்டு அத்தோடு குட் நைட்டையோ அல்லது ஆல் அவுட்டையோ பொருத்திக்கொண்டு உறங்குகிறது. மறுநாள் 'தமிங்கில' வாழ்க்கை விடியலை நோக்கி...
 இந்த வாழ்க்கை சூழ்நிலையில் தமிழையோ, தமிழ் வார்த்தைகளையோ நினைக்ககூட நேரமில்லை. ஆம் அதுதான் உண்மை.
தமிழ் மொழியில் இருந்து 40 சதவிகிதமும், சமஸ்கிருத மொழியில் இருந்து 25 சதவிகிதமும், ஆங்கில மொழியில் இருந்து 35 சதவிகிதமும் கலவைகளால் ஆன எழுத்துக்களையும், வார்தைகளையும் கொண்ட ஒரு புது மொழியாக உருவெடுத்துள்ளது. 


மே.இளஞ்செழியன்

தமிழ் நடிகர்களில் கன்னடம்,தெழுங்கு, மலையாளம்,இந்தி,வங்கம்,ஆங்கிலம் மிகச்சரளமாக பேச தெரிந்தாலும் தமிழ்நிகழ்ச்சிகளில் பிறமொழிகலக்காமல் தமிழ்பேசுகிற நடிகர் என்ற முறையில் ஜெயா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஒரு பகுதி...

-அ.தமிழ்ச்செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

MANO நாஞ்சில் மனோ இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துகள் கமலுக்கு....!!!
ராஜ நடராஜன் இவ்வாறு கூறியுள்ளார்…
இது ஒரு தீராத பிரச்சினை.எழுத்தோடு கூட ஒட்டி வந்து விடுகிறது.மொழிக் கலவையில் என் நாக்கு உளறுவதை எங்க வீட்டுலேயே சுட்டிக்காண்பிக்கிறார்கள்.இதற்கு நம்பிக்கை இழக்க வைத்த மேடைப்பேச்சுகளின் போலித்தனமும் ஒரு காரணமென்பேன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழன் தாய் பெயரோ மம்மி..
அவன் நாய் பெயரோ ஜிம்மி..
தமிழன் நான் அழுகிறேன்..
விம்மி.. விம்மி..
(பாவலர் காசிஆனந்தன்)
வரிகள் வருகிறது நினைவிற்க்கு.
Jeyamaran இவ்வாறு கூறியுள்ளார்…
itha onnum panna mudiyathu thalaiva............
krishy இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் பதிவுகள் அருமை

வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ்.DailyLib

we can get more traffic, exposure and hits for you

To link to Tamil DailyLib or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button

உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

நன்றி
தமிழ்.DailyLib