6 மே, 2012

ராககெட் ஏவும் போது சூடம் கொளுத்தி, தேங்காய் உடைத்து அனுப்பினால்தான் வெற்றி பெறுமா
தற்போது வெற்றிகரமாக ஏவப்பட்ட ரிசாட் செயற்கைகோள் மற்றும் அக்னி ஏவுகணை செலுத்துவதற்கு முன்பும் சூடம்,கொளுத்தி, தேங்காய் உடைத்து அனுப்பியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். தனிநபரின் கடவுள் நம்பிக்கை என்பது வேறு. அறிவியல் கண்டுபிடிப்பை கையாளும் போது மதநம்பிக்கை தேவைதானா.


முரண்பாடுகளின் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு புறம் பிரபஞ்சத்தின் அமைப் பையும் தன்மையையும் மேலும் ஆழமாக அறிந்துகொள்ள விண் கலங்களை அனுப்புகிறோம். 5000 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கைத் தாக்கக்கூடிய அக்னி ஏவுகணையைச்
சோதித்துப் பார்க்கிறோம். மறுபுறம் நம் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக் கள் சந்திரனின் நிழல் பூமியில் விழக்கூடிய இயற்கை நிகழ்வான கிரகண நாள் அன்று வெளியே செல்வதற்கு அஞ்சுகிறார்கள். கடந்த காலங்களில் கோடிக்கணக் கான மக்களை பலி வாங்கிக் கொண்டிருந்த கொடிய நோய் களிலிருந்து மக்களை விடுவித்த மருத்துவ அறிவியல் மேலும் மேலும் முன்னேறிக் கொண்டிருக் கும் தருணத்தில்தான் பெண் குழந் தையைப் பெற்றெடுத்த ‘குற்றத்திற்’ காக சமூகம் பெண்களை வசை பாடுவதும் நடைபெற்றுக் கொண் டிருக்கிறது. பெண் சிசுக்களைக் கரு விலேயே அழித்துவிடும் கொடூரம் சர்வசாதாரணமாக நடைபெறு கிறது.

ஏமாறத் தயாராக இருக்கும் பக்தர்கள் 

அன்றாடம் தொலைக் காட்சி யில் ஒளிபரப்பப்படும் சோதிட நிகழ்ச் சிகள் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளன. அதிர்ஷ்டக்கற்களை யும் மந்திரிக்கப்பட்ட தாயத்துக் களையும் நாடி மக்கள் ஓடுகின்ற னர். வெள்ளி, தங்கம் விற்கும் விலையில் அதை அட்சயதிருதியை என்ற சுபதினத்தில் வாங்கினால் ஐஸ்வரியம் பெருகும் என்ற வியா பார தந்திரத்தை நம்பி மக்கள் அன்று நகைக் கடைகளுக்குப் படை யெடுக்கின்றனர். அதிர்ஷ்ட தேவ தையின் கடாட்சம் கிட்டுவதற்காக மக்கள் தங்கள் பொருளையும் நேரத்தையும் எவ்வளவு வேண்டு மானாலும் செலவிடத் தயாராக இருக்கின்றனர். தாயத்துகளையோ, விலை உயர்ந்த கைக்கடிகாரங் களையோ, விபூதியையோ கையில் ‘எங்கிருந்தோ’ வரவழைத்து பக்தர் களைப் பரவசப்படுத்தும் சுவாமி ஜிக்கள் பெருகி வருகின்றனர். ஏமாறத் தயாராக இருக்கும் பக்தர் களுக்கு உலகமே ஒரு மாயா ஜாலத்தில் பிறந்த அதிசயப் பொரு ளாகத் தெரிகிறது. இந்த உலகைப் புரிந்து கொள்ள சாதாரண அறிவு காணாது என்றும் தெய்வீக அரு ளால் ஆசீர்வதிக்கப்பட்ட மகான் களே புரிந்து கொள்ள முடியும் என் றும் அவர்கள் நம்புகின்றனர். பொதுவாகவே, மாய மந்திரங்களை யும் மூடநம்பிக்கைகளையும் கண் மூடித்தனமாக நம்பும் போக்கு காணப்படுகிறது. இதற்கெல்லாம் ஒரே காரணம், பெரும்பாலான மக்களிடையே அறிவியல் மன நிலை அறவே இல் லாததுதான். நமது ஊடகங்கள் அறிவியல் மனநிலையை உருவாக்க முயற்சி செய்யாததோடு மட்டுமல்ல, அப்படிப்பட்ட ஆரோக்கியமான மனநிலை மக்களிடையே உருவாகி விடாமல் தடுக்கும் வேலையையும் செவ்வனே செய்து வருகின்றன.

அறிவியல் வேறு, அறிவியல் மனநிலை வேறு

அடிப்படையில் அறிவியல் அறிவு வேறு.. அறிவியல் மன நிலை வேறு, ஏவுகணைகளை விண்ணில் ஏவும் விஞ்ஞானிகள் அறிவியல் அறிவில் குறைந்தவர் கள் அல்ல. ஆனால் அப்படி ஏவும் போது சூடம் கொளுத்தி, தேங்காய் உடைத்து அனுப்பினால்தான் தங் கள் முயற்சி வெற்றி பெறும் என்று அவர்கள் நம்புவார்களானால் அவர்களிடம் அறிவியல் அறிவு மட்டுமே இருக்கிறது.. அறிவியல் மனநிலை இல்லை எனப் புரிந்து கொள்ளலாம். தர்க்கரீதியான கேள் விகளின் விளைவாக பகுத்தறிவுக் குப் பொருந்தும் முடிவுகளை எடுப் பதற்கு அறிவியல் மனநிலை துணை செய்கிறது. மாய மந்திரங் களும் மூடநம்பிக்கைகளும் தர்க்க ரீதியான கேள்விகள் முன் தவிடு பொடியாகிவிடும். “அறிவியல் என் பது உலகை முன்னேற்றப் பாதை யில் அழைத்துச் செல்லும் அறி வோடு சம்பந்தப்பட்டது. ஆனால் அறிவியல் மனநிலை என் பது அந்த எல்லையைத் தாண்டி யது” என ஜவஹர்லால் நேரு ‘டிஸ்க வரி ஆப் இந்தியா’ என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார்.

எதையும் கேள்விக்கு உட்படுத்து

கேள்விக்கும் பகுத்தறிவுக்கும் உட்படுத்தாமல் எந்தக் கருத்தை யும் ஏற்பதில்லை என்ற மன உறுதியே அறிவியல் மன நிலை. துரதிருஷ்டவசமாக, நம் சமூ கத்தில் கேள்வி கேட்பது பொதுவாக வர வேற்கப்படுவதில்லை. அது மட்டு மல்ல, பல நேரங்களில் கேள்வி கேட் டவர் தண்டிக்கவும் படுகிறார். பெரி யவர்களின் அல்லது ஆசிரியர் களின் வார்த்தைகளை கேள்வி எது வும் கேட்காமல் அப்படியே தெய் வீகக் கட்டளைகளாக ஏற்க வேண் டும் என்ற போதனையுடன் தான் நமது குழந்தைகள் வளர்க்கப்படு கின்றனர். இத்தகைய சூழ்நிலை மாறினால்தான் அறிவியல் மன நிலை செழித்தோங்க முடியும்.

-பேராசிரியர் கே. ராஜு
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Related Posts Plugin for WordPress, Blogger...