முதல் முறையாக விளம்பரங்களில் நடிக்கும் கமல்



நடிகர், நடிகைகள் பலர் நடிக்க வந்த ஒரு சில ஆண்டுகளில் விளம்பர படங்களில் நடித்து பெரும் வருவாய் பார்த்து வருகின்றனர்.
ஆனால் தமிழ் நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் கமலஹாசன் மட்டும் எந்த விளம்பர படங்களையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தனர்.தனது 50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக விளம்பரங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் கமல்ஹாஸன்.
தாங்கள் இத்தகைய விளம்பரங்களில் நடிப்பதால், ரசிகர்களை தவறாக திசை திருப்பவது போலாகிவிடும் என்ற காரணத்தால் இத்தகைய முடிவை மேற்கொண்டிருந்தனர்.
கமல் தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டு விளம்பர படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். 50 ஆண்டுகளாக கமல் சினிமாவில் இருக்கிறார். இதுவரை அவர் விளம்பரங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது முதல் தடவையாக விளம்பர படங்களில் நடிக்க மும்பை நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த நிறுவனம் மூலம் எற்கனவே இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஷாருக்கான, கரீனாகபூர், பிரியங்கா சோப்ரா போன்றோர் விளம்பர படங்களில் நடித்துள்ளனர்.
சினிமா வாழ்க்கையில் முதல் தடவையாக இந்த முயற்சியில் இறங்குவதாக கமல் தெரிவித்துள்ளார். சமூக சேவையில் அக்கறையுள்ள விளம்பர படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
அல்லயன்ஸ் மீடியா என்ற நிறுவனம்தான் கமலை வைத்து விளம்பரங்களை எடுக்கப் போகிறது. இந்த நிறுவனம்தான் அமிதாப், ஷாரூக், சாயிப் அலிகான், கரீனா என பல பிரபலங்களையும் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

  •    வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள நவீன எந்திரம்...!
    08.12.2021 - 0 Comments
     தற்கொலை செய்து கொல்வது  சட்டபூர்மாக தவறு.வாழ்க்கையில் தோற்றுப்போனவர்கள்,குடும்ப பிரச்சனைகளை…
  • அமீரின் ஆதிபகவன் ஸ்டில்கள் + ஜெயம் ரவி பேட்டி
    01.08.2012 - 1 Comments
    இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துக்கொண்டிருக்கும் படம் ஆதி பகவன்.இப்படத்தில் இரட்டை…
  • சூர்யாவின் அஞ்சான் பட ஸ்டில்கள்..
    08.07.2014 - 0 Comments
    300 கெட்-அப்புகள் வரை சூர்யாவுக்கு போட்டுப் பார்த்து அதில் இரண்டு கெட்அப்புகளை அஞ்சான் படத்திற்காக…
  • தலைக்கு ஹேர் டை அடிப்பவர்களுக்கு எச்சரிக்கை
    01.08.2014 - 0 Comments
    கண்ணுக்கு மை அழகு... கவிதைக்கு பொய் அழகு... .... முதுமைக்கு நரை அழகு... ஆனால் முதுமையையும்,நரையையும்…
  • நான் காதலுக்காக வழக்காடுகிறேன்
    14.02.2012 - 1 Comments
    வானவில்லை நீங்கள் தண்ணீர் தூறலில் தரிசித்திருப்பீர்கள் அந்த…