கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன்


ஜப்பான் கடல் பகுதியில் கப்பல் மற்றும் விமானங்களை விழுங்கிவிடும் லீலங் எனும் ராட்சதடிராகான்,இன்றுவரை புரியாத புதிராக உள்ள டிராகன் முக்கோணப் பகுதியில் அட்டகாசம் செய்து வருவதாக பரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
    அமெரிக்காவின் மியாமி,அட்லாண்டிக் கடலில் உள்ள பெர்முடாதீவு மற்றும் அருகில் உள்ள போர்டோரிகோ தீவுகளை இணைத்திடும் பகுதி பெர்முடா முக்கோணம் என்றும்.சாத்தானின் முக்கோணம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த முக்கோணத்தை கடந்து செல்லும் விமானங்களும்,கப்பல்களும் திடீரென மாயமாகி ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுவந்துள்ளது.குறிப்பாக 1945 ம் ஆண்டு 14 வீரர்களுடன் பயிர்ச்சிக்கு சென்ற பிளைட் 19ரக அமெரிக்க போர்விமானங்கள் 5,இதனை தேடி 13 பேர்களுடன் சென்ற விமானம்,300 பேருடன் சென்ற அமெரிக்க போர்க்கப்பல்
சைக்ளப்ஸ்,சரக்கு கப்பல் சல்போர்குவின்,இதோ போல் நூற்றுக்கணக்கான பேருடன் சென்ற பிரிட்டிஸ்ஜமைக்கா, அமெரிக்க ஏர்வேஸ் விமானங்கள் பெர்முடா முக்கோணத்தை கடந்து செல்லும் போது காணாமல் போன சம்பவங்கள் தொடர்பான மர்மங்கள் இன்று வரை விடைகிடைக்கவில்லை.

            இதற்கான மர்மத்திற்கு விடை தேடி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் பெர்முடா முக்கோணம் அமைந்துள்ள பகுதிக்கு நேர் எதிர்ப்புறத்தில் டிராகன் முக்கோணம் என்ற அமானுஷ்ய பகுதி உள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் மேற்குகரையின் தெற்கில் யீப் தீவிற்கும்,மேற்கில் தைவானுக்கும் இடைப்பட்ட பகுதிதான் ஜப்பானியர்களால் டிராகன் முக்கோணம் எனறு அழைக்கப்படுகிறது. சாத்தான் முக்கோணத்தில் உள்ள அனைத்து மர்மங்க¬ளையும் உள்ளடக்கியதாக இந்த டிராகன் முக்கோணம் விளங்குகிறது. டிராகன் முக்கோணத்தை கடந்து செல்லும் கப்பல்கள், விமானங்கள் போன்றவை மர்மமான முறையில் காணமல் போய்விடுவதாக கூறப்படுகிறது.

  டிராகன் முக்கோணத்தின் மர்மங்களை லீஜீவான் என்ற விஞ்ஞானியின் தலைமையில் ஆய்வு நடத்திட 22 பேருடன் சென்ற கப்பல் சுவடு தெரியாமல் மாயமாகிவிட்டது.இதே போன்று சீனா,தைவான் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் விமானம் டிராகன் முக்கோணத்தை கடந்து செல்ல முடியாமல் காற்றில் கரைந்து காணமல் பேய்விட்டது. இதே போன்ற சம்பங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் 1950 ம் ஆண்டில் டிராகன் முக்கோணம் பகுதியை
ஆபத்தான கடல் பகுதி என ஜப்பானிய அரசு முறையாக அறிவித்துவிட்டது.
இதன் காரணமாக தப்பித்தவறி கூட எந்த ஒரு விமான,கடற்போக்குவரத்தும் இந்த பகுதியில் நடைபெறுவதில்லை. இதை தொடர்ந்து 20 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நடைபெற்ற ஆதிதீவிர ஆய்வு பணியின் போது டிராகன் முக்கோணத்து பகுதியில் பூவியீர்ப்பு விசை அதிகமாக இருப்பதும், சூரியனின் மின்காந்த ஆ லை களின் தாக்கம் அதிகமாக இருப்பதும் விமானம்,கப்பல்களை கட்டுப்பாட்டை இழக்கச்செய்து கடலில் முழ்கடித்து மாயமாக்கி இருக்கலாம்
என்று தெரியவந்தது.

இதேபோல் கடல்பகுதியில் ஏற்படும் நீரின் தன்மை மாற்றத்தினாலும் கப்பல்கள் அந்த பகுதியில் முழ்கி வருவதாக நம்பப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக பசிபிக் பெருங்கடலில் டிராகன் முக்கோணம் அமைந்துள்ள கடல் பகுதியின் ஆழத்தில் லீலங் என்ற ராட்சதடிராகன் உயிரினம் வசித்து வருவதாக ஜப்பானியர்கள் நம்புகின்றனர். இந்த லீலங் டிராகன் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது அவ்வழியே இரைச்சலுடன் செல்லும் விமானம்,கப்பல்களை கோபத்தில் விழுங்கி கபளீகரம் செய்து விடுவதாக ஜப்பானிய மூதாதையர்கள் தெரிவித்தனர். இதை வைத்து தான் லீலங் டிராகன் வசிக்கும் ஆழ¢கடல் பகுதியை டிராகன் முக்கோணம் என்று ஜப்பானியர்கள் அழைக்கிறார்கள்.இதனால் இப்பகுதியை பாய்மரம், கட்டுமரம்,போன்ற இரைச்சல் இல்லாத கலங்களை கொண்டு கடந்து சொல்வோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. மேலும் கடல் மற்றும் ஆகாய பயணம் மேற்கொள்வோரின் அனைத்து ஜப்பானியர்களின் வீடுகளிலும் லீலங்டிராகன் பட்த்தை வைத்து வணங்கி வருவது இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மேலும் டிராகன் முக்கோண பகுதியில் வேற்று கிரக மணிதர்கள் வசிக்கும் பகுதியாக தகவல் வருகின்றன. 

இதோ அதைப்பற்றி வீடியோ தொகுப்பு                   டிராகன் முக்கோணம் குறித்து அறிவியல் அறிஞர்கள் கருத்து தெரிவிக்கையில் அங்கொன்றும்,இங்கொன்றுமாக இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அன்றைய காலகட்டத்தில் விபத்துகள் நடந்திருக்கலாம்,ஆனால் இன்றைக்கோ விஞ¢ஞான வளர்ச்சியின் விளைவாக கிராபிக்ஸ் செய்து எடுக்கப்பட்ட திரைப்படங்களால் டிராகன் முக்கோணம் லீலங்டிராகனும் பெரிய அளளில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.ஆனால் உண்மையான நிலை என்னவென்றால் பெர்முடா,டிராகன் முக்கோண பகுதிகளை இன்று தினந்தோறும் கப்பல்களும்,விமானங்களும் அதிக அளவில் கடந்து செல்கின்றன என்பது தான் நிதர்சனமான உண்மை என்று கூறியுள்ளனர்.
      எது எப்படியிருந்தாலும் கப்பல்களையும், விமானங்களையும் விழுங்கும் லீலங்டிராகனும்,டிராகன்முக்கோணமும் அதன் மர்ம கதைகளும் சில நூற்றாண்டுகளை கடந்தும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டுதான் இருக்கும்

-செல்வராஜ்

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்