‘சிங்கம்-2’- ஜூன் மாதம் தொடக்கம்: டைரக்டர் ஹரி பேட்டி




தற்போதைய தமிழ் சினிமா டிரெண்ட் என்ன தெரியுமா, பழைய படங்களை ரீமேக் செய்வது,அல்லது வெற்றிகரமாக ஓடிய படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதுதான்.
ஏற்கனவே நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடிக்க இம்சைஅரசன் இராண்டாம் புலிகேசி 2 வரஇருக்கிறது.தள்போது சூர்யா நடித்து வெற்றி படமான சிங்கம், இரண்டாம் பாகமாக சிங்கம் -2 வர உள்ளது.
 நடிகர் சூர்யாவும், டைரக்டர் ஹரியும் இணைந்து பணிபுரிந்த படங்கள் ஆறு, வேல், சிங்கம். இந்த மூன்று படங்களும் வெற்றிபெற்றதை தொடர்ந்து நடிகர் சூர்யாவும், டைரக்டர் ஹரியும் மீண்டும் இணைகிறார்கள். அந்தபடம் ஏற்கனவே வெளியான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகமாக சிங்கம்-2 என்ற பெயரில் உருவாகிறது.

தற்போது டைரக்டர் ஹரி, தனது குலதெய்வம் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வதற்காக குடும்பத்துடன் தன்னுடைய சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளைக்கு வந்துள்ளார்.

சிங்கம்-2 படம் குறித்து டைரக்டர் ஹரி கூறியதாவது:-

எனது சொந்த ஊரான சக்கனாவிளையில் எங்களின் குலதெய்வம் கோவிலான நாராயணசுவாமி கோவில் இருக்கிறது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா தற்போது நடந்துவருகிறது. அதில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் இங்கு வந்துள்ளேன்.

சிங்கம்-2 தூத்துக்குடி சம்பந்தப்பட்ட கதையாகும். இந்த படத்தின் கதை தென்னிந்தியாவில் தொடங்கி தென்ஆப்ரிக்காவில் முடிகிறது. சிங்கம்-2 படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தூத்துக்குடியில் தொடங்குகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடி மாவட்டத் திலேயே படமாக்கப்படுகின்றன. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியிலும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

இதில் நடிகர்கள் சூர்யா, விவேக், சந்தானம், நடிகைகள் அனுஷ்கா, ஹன்சிகா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்-நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். சிங்கம்-2 படத்தின் உச்சகட்ட காட்சிகள் தென் ஆப்ரிக்காவில் படமாக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு டைரக்டர் ஹரி கூறினார்.
-சத்யஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

  • தேவர் குல பெருமக்களே திருந்தவே மாட்டீர்களா?
    08.11.2012 - 11 Comments
    பசும்பொன் தேவரின் பெயரால், அவரது குருபூஜையன்று ஒவ்வொரு வருடமும் நடந்துவரும் வன்முறைக்கு அளவேயில்லாமல்…
  • பேஸ்புக்கில் மங்கள்யானை பின் தொடர ....
    07.11.2013 - 1 Comments
    2 மணி நேரத்திற்குஒருமுறை மங்கள்யானை என்ன செய்கிறது  என தெரிந்து கொள்ள விருப்பமா?...…
  • இவ்வளவு எளிமையானவரா முதல்வர்?நடிகர் சூர்யா ஆச்சர்யம்.
    25.01.2017 - 0 Comments
    இவ்வளவு எளிமையானவரா முதல்வர்?நடிகர் சூர்யா ஆச்சர்யம். வார்ட் கவுன்சிலர் பண்ற அலப்பரையே தாக்கமுடியாது .…
  • தெனாலிராமன் ..... பார்க்கலாமே
    20.04.2014 - 2 Comments
    வழக்கத்தை விட எங்கள்  ஊர் தியோட்டரில் கூடுதல் கூட்டம். பெண்கள் ,குழந்தைகளை பார்க்க முடிந்தது.ரெம்ப…
  •   ஆயிரக்கணக்கான பறவைகள்  தற்கொலை
    25.06.2016 - 0 Comments
    தொழில் அதிபர் குடும்ப த்துடன் தற்கொ லை. குழந்தை களுக்கு விஷ்ம் கொடுத்து கொ ன்றுவிட்டு தாயும் தற்கொ லை.…