நான் என் ஆன்மாவை சாத்தான்களிடம் விற்றுவிட்டேன் - இயக்குநர் வெற்றிமாறன்


சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் முதுகலை ஊடகக் கலைகள் துறையின் சார்பில் “21ம் நூற்றாண்டில் தமிழ்த் திரையுலகின் போக்குகளும் புதிய முயற்சிகளும்” என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன், இனி கார்ப்பரேட்களின் கைகளில் தமிழ் சினிமா சிக்கிக் கொள்ளப் போகிறது. இந்நிறுவனங்களின் அளவிற்கு நமது தயாரிப்பாளர்கள் முதலீடு செய்ய முடியாது. இதனால் முதலீடு செய்வது பன்னாட்டு நிறுவனங்கள் என்பதால் ,
அவர்கள் சொல்வதைப்போல்தான் படம் எடுத்திட முடியும். கார்ப்பரேட் நிறுவனங்கள் எடுக்கிற படங்களைப் பார்க்காதவர்கள் எல்லாம் வாழத் தகுதியே இல்லாதவர்கள் என்ற நிலைமை உருவாக்கப்பட்டு வருகிறது. எனவே, நமது அடையாளங்களை நாம் தெரிந்தே தொலைக்கப் போகிறோம்
என வருத்தத்துடன் தெரிவித்தார்.

இதன்பின் பேசிய இயக்குநர் பாலுமகேந்திரன், உங்கள் படங்களுக்கு என்ன தேவையோ, அதை மட்டும் எடுங்கள். அப்படி செய்தால் படத்தின் செலவினங்கள் குறையும். இன்றைக்கு உலக சினிமா என்று சொல்லப்படுவது எல்லாம், உள்ளூரில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்களே என தெரிவித்தவர், இது வெற்றி மாறனுக்கும் பொருந்தும். அதனால் பட்ஜெட்டை குறைத்துக்கொள் என அன்புக்கட்டளையிட்டார். இதற்கு வெற்றி மாறன், நான் என் ஆன்மாவை சாத்தான்களிடம் விற்றுவிட்டேன் என வருத்தத்துடன் உண்மையை உடைத்து, தமிழ் சினிமாவின் நிலையை சுட்டிக்காட்டினார்.

 -சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

  •    ஒருபாட்டில் தண்ணீர் விலை 65 வட்சம்
    22.10.2021 - 0 Comments
    அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் பிவர்லி ஹில்ஸ் 90எச்20 என்ற பெயரில் தண்ணீர் பாட்டில் ஒன்றை இந்தியாவில்…
  • செவ்வாய் கிரகத்திற்குச் சுற்றுலா!  டிக்கெட்டின் விலை ரூ. 2.5 கோடி
    28.11.2012 - 6 Comments
    சூரியக் குடும்பத்தில் பூமியில் மட்டுமே மனிதர்கள் வசித்து வருகின்றனர். பூமியைத் தவிர மற்ற கிரகங்களில்…
  •  புத்தகயா குண்டுவெடிப்பும் - புத்தரின் போதி மரமும்....
    09.07.2013 - 2 Comments
    அமைதியை போதித்த புத்தரின் வழிபாட்டுதளத்தில் குண்டுவெடிக்க செய்து என்ன சாதிக்கப்போகிறார்கள் தீவிரவாதிகள்.…
  • நாளை முதல் நீங்கள்,நான் ..800 கோடியில் ஓருவர்
    14.11.2022 - 1 Comments
     நாளை முதல் நாம் 800 கோடியில் ஒருவர் ஆகிவிடுவோம்..நாளை உலகத்தின் மக்கள்தொகை 800கோடியாக உயருகிறது.நாம்…
  • நோட்டாவுக்கு 60 லட்சம்  ஓட்டு...
    18.05.2014 - 0 Comments
    நாட்டில் 60லட்சம் வாக் காளர்கள் எந்த வேட்பாளருக் கும் வாக்களிக்க விரும்பவில் லை என்கிற நோட்டா பொத்…