வேற்று கிரக மனிதர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் (படங்களுடன்)


நம் கண்ணுக்கு முன்னாள் எல்லையற்று விரிந்து பரந்து கிடக்கும் பிரபஞ்சத்தில், மனிதர்களாகிய நாம் மட்டும் தான் தனித்து இருக்கிறோமா? அல்லது வேறுகிரகங்களில் நம்மைபோல மனிதர்கள் இருக்கிறார்களா என்ற தேடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆர்வத்தை கொண்டுதான் மார்ஸ்அட்டாக், மென்இன் பிளாக், அவதார் போன்ற படங்கள் வெளிவந்தன. மிகப்பெரும் வெற்றியை அப்படங்கள் பெற்றன.
      வேற்றுகிரகமனிதர்களை தேடும் முயற்சிகாக பல்வேறுநாடுகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. ரோடியோ அலைகளை விண்வெளியில் அனுப்புவது. ஹாப்பிள், கெப்ளர் போன்ற விண்வெளி தொலைநோக்கிகள் மூலமாகவும் தேடுவது. மேலும் 1977 ம் ஆண்டு அனுப்பபட்ட வாயேஜர் செயற்கைகோளில் பூமி மனிதர்களின் படங்கள்,ஒலி போலைகள், சூரியகுடும்பம் குறித்த தகவல் அடங்கிய
தங்கதகடு பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் பிரபஞ்சவெளியில் சூரிய மணட்லத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இதை பார்ககும் வேற்றுகிரகமனிதர்கள் நம்மை தொடர்பு கொள்வார்கள் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதனிடையே


வேற்று கிரகங்களில் வாழும் மனிதர்களை அமெரிக்க அதிபர் சந்தித்த செய்தி தற்பொழுது வெளியாகிஉள்ளது.


உலகம் முழுவதும் நம்பப்படும் செய்தி வேற்று கிரகத்தில் மனிதர்கள் உள்ளனர் என்பதுதான். உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே வேற்று கிரக மனிதர்களோ அல்லது அவர்கள் பறந்து செல்லும் தட்டு தென்பட்டதாக செய்திகள் வரும். ஆனால் இன்று வரை அந்த செய்திகள் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில் பிபிசி 2 கரண்ட் அபையர்ஸ் இல் பங்கேற்று, அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினரும் பென்டகனின் ஆலேசாகருமான பணிபுரிந்த குட் பேசுகையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிவைட் டி ஐசனோவர் வேற்று கிரக மனிதர்களை மூன்று முறை சந்தித்தார் என்று கூறினார்.

எப்பிஐ அதிகாரிகள் டெலிபதி தகவல் பரிமாற்ற முறை மூலம் வேற்று கிரக மனிதர்களை தொடர்பு கொண்டதாகவும், அதனை ஏற்ற வேற்று கிரக மனிதர்கள் அமெரிக்காவின் அன்றைய அதிபர் டிவைட் டி ஐசனோவரை கடந்த 1954ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஹோல்மென் ராணுவ விமான தளத்தில் மூன்றுமுறை சந்தித்தனர் என கூறினார். இந்த சந்திப்பை கண்டதற்கான பல சாட்சிகள் உள்ளன எனவும் கூறியுள்ளார்.
வேற்று கிரக மனிதர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மனிதர்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்த தகவல் இதுவரை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறினார். ஆனால் குட் இன் இந்த பேச்சை அமெரிக்க அதிகாரிகள் இதுவரை மறுக்கவில்லை.

மேற்கண்ட செய்தியை உண்மையாக்கும் வகையில் 1996ல்வெளிவந்த "மார்ஸ்அட்டாக்" படத்தில் செவ்வாய் கிரகமனிதர்கள் அமெரிக்க படை தளபதியையும், மக்களையும் கொன்றுகுவிக்கும் காட்சி
 நீங்கள் பார்த்த படங்களும், செய்தியும் எந்த அளவுக்கு நிஜமானது எனதெரியவில்லை? .இந்த தகவலை ஒட்டி சில கேள்விகள் எழுகின்றன

வேற்று கிகரமனிதர்கள் அமெரிக்க அதிபரை மட்டும் ஏன் சந்தித்தார்கள்? 
1954க்கு பிறகு அவர்கள் ஏன் வரவில்லை?
58 ஆண்டுகளுக்கு பின் மிகத்தாமதமாக இந்த தகவலை வெளியிட காரணம் என்ன?
மேற்கண்ட படங்கள் எந்த அளவுக்கு உண்மையானவை? 
இப்படி பல கேள்விகளுக்கு விடை சொல்லுமா அமெரிக்க நிர்வாகம்.

-அ.தமிழ்ச்செல்வன்

இந்த பதிவுடன் தொடர்புடைய பதிவுகளை படிக்க கீழே இணைப்பு உள்ளது


பறக்கும் தட்டுகளில் வந்த வேற்றுக்கிரக மனிதர்களின் ஆபுர்வ புகைப்படங்கள்

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

பரமசிவம் இவ்வாறு கூறியுள்ளார்…
என்றேனும் ஒரு நாள் இது நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இச்செய்தி.
நன்றி