எனது பிளஸ்2 ஆசிரியரை தேடிக்கொண்டிருக்கிறேன் - இயக்குனர் சசிக்குமார் பேட்டி


ஒவ்வொரு பேட்டியிலும் எனது ப்ளஸ்2 ஆசிரியரை பற்றி தெரிவி க்கிறேன்.ஆனால் அவரை பார்க்க முடியவில்லை என கண்கலங்கிய இயக்குனார் சசிக்குமார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கல்லூரி விழா வில் கலந்துகொண்ட இயக்குனர் சசிக்குமார் மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்...

கேள்வி - சினிமாத்துறைக்கு நீங்கள் வந்திருக்காவிட்டால்?
பதில் -  சினிமாத்துறைக்கு வருவது தான் எனது லட்சியம், வேறு எந்தத்துறையும் எனக்குத் தெரியாது,7ம் வகுப்பு படிக்கும் போதே சினிமா இயக்குனராக ஆசைப்பட்டேன்.


கேள்வி - எப்படி நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்?
பதில் - வெட்கமாக இருக்கிறது.

கேள்வி - சினிமாத்துறையில் நீங்கள் பட்ட கஷ்டம் என்ன?
பதில் - நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன், ஆனால் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டுள்ளேன்.நீங்களும் உங்களுக்கு பிடித்த துறையில் கஷ்டப்பட்டு பெரிய ஆளாக வரவேண்டும்.

கேள்வி - உங்களது முதல் படமே வெற்றி பெற்றது, அதற்கு முன்பு தோல்வியை தழுவியுள்ளீர்களா?

பதில் -  வெற்றி,தோல்வி என்பது சகஜம், ஆனால் அதையை தலையில் தூக்கி வைத்துக் கொள்ள க்கூடாது. அதே போன்று விளையாட்டிலும், படிப்பிலும் நிறைய வெற்றியும், தோல்வியும் உண்டு.

கேள்வி - நீங்கள் தாடிவைத்து நடிப்பதற்கு என்ன காரணம்?
பதில் -  ஒரு காரணமும் இல்லை, சுப்பிரமணியபுரம், நாடோடிகள் ஆகிய படங்களில் தாடியோடு நடித்தேன், இது மக்களின் மனதில் பதியப்பட்ட விஷயம், இதை என்னலே தான் மாற்ற முடியும்.

கேள்வி - நீங்கள் சினிமாத்துறைக்கு வருவதற்கு பொற்றோர்கள் ஆதரவு தந்தார்களா?
 பதில்- அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காததே எனக்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு சமமாகும்.ஏன் கஷ்டப்படுகிறாய் என கேட்டார்கள். நானும் இஷ்டப்பட்டு கஷ்டப்படுகிறேன் என்று கூறினேன்.

கேள்வி - இயக்குனராகவும், நடிகராகவும் செயல்படும் போது உங்கள் அனுபவம் எவ்வாறு இருக்கும்?


பதில் -  இயக்குனராக இருக்கும் போது டென்ஷனும்,ரெஸ்பான்சிபிலிட்டியும் அதிகம், ஆனால் நடிகனாக இருக்கும் போது நடிப்பில் மட்டுமே கான்சன்ட்ரேஷன் பண்ண முடியும். நடிகனாக நடிப்பதை காட்டிலும் இயக்குனராகும் போது சிரமம் உள்ளது.

கேள்வி - எல்லாபெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை டாக்டராகவும், இன்ஜினியராகவும் ஆக்க ஆசைப்படுகின்றனர்,சினிமாத்துறையில் பங்காற்ற ஆசைப்படுவதில்லையே ஏன்?
பதில் - சினிமாக்காரர்கள் என்றால் தள்ளி வைத்து தான் பார்க்கின்றனர். அதற்கு விழிப்புணர்வு அவசியம்.நடிகரோடு போட்டோ எடுக்க ஆசைப்படுகின்றனர். ஆனால் தவறாகவே போக்கஸ் பண்ணுகின்றனர். சினிமா என்றால் தவறான விஷயம் என்றாகி விட்டது.இது மாற வேண்டும்.

கேள்வி - நீங்கள் பள்ளியில் படிக்கும் போது தங்களுக்கு பிடித்த ஆசிரியர் யார்?
பதில் - நான் பிளஸ் 2 படிக்கும் போது எனது மிஸ்(டிச்சர்) ஆக்னஸ் அவர்கள். ஒவ்வொரு மாணவனும் மதிப்பெண் பார்க்கும் போது மதிப்பெண் குறைவாக இருந்தால் அவன் மட்டுமே வருத்தப்படுவான். ஆனால் எனது மதிப்பெண் குறைவாக இருந்தால் எனது மிஸ்தான் வருத்தப்படுவார்.அவர் கொடுத்த ஊக்கமும், தைரியமும் தான் என்னை இந்த அளவுக்கு ஆளாக்கியுள்ளது. அவரைப் பார்க்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்.ஒவ்வொரு பேட்டியிலும் அவரை ப்பற்றி நான் தெரிவிக்கிறேன். ஆனால் அவரை பார்க்க முடியவில்லை என உணர்ச்சி பூர்வமாக கண்கலங்கிய படி தனது பேட்டியை முடித்து கொண்டார்.

ஒரு வேண்டுகோள் - இயக்குனர் சசிக்குமாரின் ஆசிரியரோ,அல்லது அவரை தெரிந்தவர்களோ இருந்தால் சசிக்குமாருக்கு உதவலாமே

-சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments