13 பிப்., 2012

10 மாதங்களில் மீண்டும் எழுந்த ஜப்பான் படங்கள்


சுறுசுறுப்புக்கும், உழைப்புக்கும் பெயர்பெற்றவர்கள் ஜப்பானியர்கள்.ஒரு சிறிய தீவு நாடு உலகத்தின் பொருளாதார வல்லரசாக திகழ்கிறது என்றால் ஜப்பானியர்களின் உழைப்பு எப்படிபட்டதாக இருக்கும்?.
1960களில் இராண்டாம் உலகப்போரில் அமொரிக்கா வீசிய அணுகுண்டுகளால் ஷிரோசிமா,நாகசாகி நகரங்கள் முற்றிலும் அழிந்து போனது, 1லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.அவற்றையெல்லாம் தங்களின் உழைப்பினால் மாற்றியமைத்தார்கள். பட்டகாலிலேயே படும் என்பது போல, மீண்டும் 2011 ம் ஆண்டு மார்ச் மாதம் சுனாமி,நிலநடுக்கத்தினால் 30,000 பேர் மரணமடைந்தனர். 1 லட்சம் ஜப்பானியர்கள் தங்களது வீடுகளை இழந்தனர்.புகுஷுமா அணு உலைகள் உட்பட ஜப்பானின் பெரும்பாலான தெற்கு நகரங்கள் முற்றாக அழிவடைந்திருந்த கொடூர நிகழ்வுக்கு பின், எப்படி இதிலிருந்து ஜப்பான் மீளப்போகிறது என உலகம் மீண்டும் ஒரு முறை கேள்விக்குறியோடு பார்க்க தொடங்கியது. இதோ! இப்படித்தான் என 10 மாதங்களில் அதற்குரிய பதிலை தந்திருக்கிறது, சுனாமி மற்றும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட மொத்த அழிவு : 300 பில்லியன் USD. ஆனால் இந்த மீள் கட்டுமாண பணிகளுக்கு ஜப்பான் அரசு செலவிட்டது 50 பில்லியன் USD. மற்ற படி 10 மாதம் ஜப்பானியர்களின் அயராத தொடர் உழைப்பு தான் இந்த மாற்றத்திற்கு காரணம்.
Photos : Getty Images, AFP

-அ.தமிழ்ச்செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...