சூர்யாவின் மாற்றான் - மாஸ்கோ படப்பிடிப்பு காட்சிகள்


7ம் அறிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் மாற்றான்,அதே போல அயன்,கோ போன்ற வெற்றி படங்களுக்கு பிறகு இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா, காஜல் அகர்வால், சச்சின் கடேகர் மற்றும் பலர் நடிக்க கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார்.
தலை ஒட்டிப்பிறந்த இரட்டை வேடம், மேலும் 5 விதமான கேரக்டர்கள் செய்கிறார் சூர்யா என்கிறார்கள் திரைப்பட வட்டாரத்தில். தமிழ் சினிமா அதிகம் பார்த்திராத லொகேஷன்கள்தான் இயக்குநர் கே.வி. ஆனந்தின் இலக்கு. 'அயன்' படத்துக்காக நைஜீரியா, காங்கோ
என ஆப்ரிக்காவில் முகாமிட்டவர், 'கோ' படத்துக்கு சீனாவுக்கும், நார்வேக்கும் போனார். சூர்யா நடிக்கும் 'மாற்றான்' படத்துக்காக ரஷ்யா சென்றனர் ஆனந்த் குழுவினர். கடந்த செப்டம்பர் 29-ம் தேதியே மாஸ்கோ சென்றுவிட்டனர்.ரஷ்ய நகரங்களை விட, அங்குள்ள கிராமங்கள் மற்றும் இயற்கைக் காட்சிகளை மையப்படுத்தி அதிக காட்சிகளை எடுத்துள்ளார் கே.வி. ஆனந்த். கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.மாற்றானுக்காக சென்னை  OMR சாலையில் சண்டைக் காட்சிகளை கே.வி.ஆனந்த் படமாக்கி முடித்திருக்கிறார். இன்னும் 25% படப்பிடிப்பு வேலைகள் மட்டுமே பாக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இதற்குப் பிறகு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் மாற்றான் படப்பிடிப்பை நடத்த கே.வி.ஆனந்த் திட்டமிட்டு இருக்கிறார்.


2012 கோடை விடுமுறைக்கு இப்படத்தினை வெளியிட படக்குழு தீர்மானித்து இருக்கிறது
.- சத்யஜித்ரே


உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் -select profile  அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்