சூரிய புயல் - உலக அழிவின் ஆரம்பமா? (நாசா வெளியீட்டுள்ள படங்கள்)


சூரியனின் மேற்பரப்பில் தோன்றியுள்ள காந்தப்புயல் பூமியை மூன்று விதமாக வெவ்வேறு தருணங்களில் தாக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.   சூரியனின் மேற்பரப்பில் இருந்து லட்சக்கணக்கான மின்அழுத்தம் கொண்ட கதிர் வீச்சுகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன
.சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற் றங்களால், கதிர்கள் பெரு மளவில் கொந்தளித்து, அலைகளை வீசுவது, சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல் எனப்படு கிறது. கடந்த சில ஆண்டுக ளாகவே சூரியனின் மேற் புறம் அமைதியாகவே இருந்து வருகிறது. இந்நிலை யில், கடந்த 22ம் தேதி சூரி யனின் மேற்புறத்தில் இருந்து புறப்பட்ட சூரிய அதிர் வலை, ஒரு மணி நேரத்தில் பூமியைத் தாக்கியது. தற் போது, அதைவிட சக்தி வாய்ந்த சூரியஅதிர்வலை,  பூமியைத் தாக்கும் என, “நாசா’ தெரிவித்துள் ளது. இந்த தாக்குதல் மூன்று விதத்தில் நிகழும். முதலில் மின்காந்தத் தூண் டல் கதிர்வீச்சும், இரண்டா வதாக, புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலையால் கதிர்வீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச் சும் அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும். இந்த கதிர் வீச்சுகளினால், பூமியின் மேற்புறத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற் கைக்கோள்கள், சர்வதேச விண்வெளி நிலையம்,சற்று பாதிக்கப்படலாம். பூமியின் சில பகுதிகளில் மின்சாரத் தொகுப்பு நிலையங்கள் பாதிக்கப்படலாம். எனி னும், கடந்த 1989ல் நிகழ்ந்த சூரிய அதிர்வலையைப் போல் அல்லாமல், இந்த முறை சற்று குறைவாகவே இருக்கும் எனவும், அது பூமியின் வடதுருவத்தில் தான் அதி களவில் பாதிப் பை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அமெ ரிக்கா நேரப்படி செவ்வாய் காலை 10 மணியளவில் (ஜி.எம்.டி., நேரப்படி 15.00 மணியளவில்) சூரிய புயல் பூமியை தாக்கியது. இது கடந்த அக்டோபர் 2003ம் ஆண்டை காட்டிலும் ஏற் பட்ட சூரிய புயலை விட அதிகம் என நாசா கூறியுள் ளது. மேலும், சூரிய புயலில் வரும் கதிர்வீச்சு மனித னுக்கு எந்தவித பாதிப்பை யும் ஏற்படுத்தாது எனவும் அமெரிக்க விண்வெளி நிறு வனம் கூறியது. இந்த கதிர் வீச்சுக்கள் அடுத்த (பிப்ரவரி 1)புதன்கிழமை வரை இருக்கும் எனவும், இதனால் விண்வெளி தொடர்பு, விமானப் போக்கு வரத்து பாதிக்கப்படக்கூடும் என நாசா கூறியுள்ளது. கதிர்வீச்சு குறையும் வரை விமானப்போக்குவரத்து கண்காணிக்கப்படும்.
 2012 ம் ஆண்டு டிசம்பரில் உலகம் அழியும் என மாயன் காலண்டர் கூறுகிறது .முன்னெப்போதும் இல்லாத அளவிளான சூரியபுயல் அழிவின் ஆரம்பமா என்ற பயம் உலக முழுவதும் ஏற்பட்டுள்ளது.

-பென்னி செல்வன்
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்