`கொலை வெறி’ பாடல் - இலங்கை பாராளுமன்றத்தில் விவாதம்


தனுஷ் எழுதி பாடிய ஒய்திஸ் கொலைவெறி பாடல் உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஜப்பான், பாகிஸ்தான் நாட்டினர் இதை பாடுகின்றனர். இலங்கை பாராளுமன்றத்தில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்த சிங்களர்களை மனதில் வைத்து இப்பாடல் எழுதப்பட்டு உள்ளதாக காரசார விவாதம் நடந்தது.
இலங்கை பாராளுமன்றத்தில் ஊழியர் சகாய நிதியம் திருத்த சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் ஆளும் கட்சி எம்.பி.யான அஸ்வர் பங்கேற்று பேசும் போது ஜே.வி.பி. கட்சி எம்.பி.க்களை பார்த்து `ஒய் திஸ் கொலை வெறி’, `ஒய்திஸ் கொலை வெறி’ என்றார்.

பதிலுக்கு ஜே.வி.பி. கட்சி எம்.பி.க்கள் எமக்கு நோ கொலை வெறி என்றனர். தொடர்ந்து அஸ்வர் எம்.பி. பேசும் போது தமிழ் நாட்டுகாரர்களுக்கு கொலை வெறி பிடித்துள்ளது. அதனால் தான் அவர்கள் கொலை வெறி, கொலை வெறி என பாடலில் கூட பாடுகின்றனர். எங்கள் மீது உள்ள கொலை வெறியில் தான் நம்மை பார்த்து இந்த பாடலை பாடியுள்ளனர் என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய ஜோகராஜன் எம்.பி. ஒய் திஸ் கொலை வெறி பாட்டுக்கு வேறு அர்த்தங்கள் உள்ளன. அஸ்வர் எம்.பி. தமிழகத்தவர்களுக்கு உள்ள கொலை வெறியில் தான் இந்த பாடல் பாடப்பட்டதாக சொல்வது தவறு. நீங்கள் பாடலுக்கு தவறான அர்த்தத்தை கற்பிக்க வேண்டாம் என்றார். ஆனால் அஸ்வர் எம்.பி. குறுக்கிட்டு நான் சொல்வது தான் சரி எங்கள் மீது உள்ள கொலை வெறியில் தான் இந்த பாடலை பாடி உள்ளனர் என்றார்.


உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

  •   9025241999 - இந்த எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...
    03.03.2014 - 2 Comments
    தகவல் தொடர்புத்துறை அமைச்சராக, நிதியமைச்சராக, பிரதமராக இருந்தவர்... ஐநா சபையில் இரண்டு முறை பேசியவர்.…
  • விஸ்வரூபம் புதிய புகைப்படங்கள்
    08.06.2012 - 2 Comments
    100 சதவீதம் அக்மார்க் கமல் பாணி படம் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.…
  • ஜாக்கிசான்- 100
    18.11.2011 - 0 Comments
    ஜாக்கிசானை உலக சூப்பர்ஸ்டார் என்று அழைத்தால் கூட தவறில்லை. ஆசியா கண்டத்திலிருந்து ஒரு நடிகர் ஹாலிவுடில்…
  • மதுரை அருகே   முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
    24.09.2023 - 0 Comments
    மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டி  கிராமத்தில் பெருங்கற்காலத்தை சேர்ந்த…
  • தமிழ் படிப்பதே பெருமை - சீனப் பெண் நிலானி
    04.08.2015 - 0 Comments
    தமிழில் பேசுவதையே பல தமிழர்கள் தரக்குறைவாக நினைக்கும் போது சீன மாணவியான நிலானி, தன் தமிழ் அறிவை…