காவியத் தலைவனுக்கு இன்று பிறந்த தினம்


சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். மறைந்து 25 ஆண்டுகளுக்கு பிறகும் இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும் சிலமுக்கிய தகவல்கள்!

1.எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).

2.எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !

3.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !

4.சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !


5.நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. !

6. ‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !

7.நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்

8. எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !

9.எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !

10.நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள் !

11.சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !

12.எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வரும் கோவை சரளா !

13.தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 - ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’.

15.‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !

16.அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார் !

17.ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !

18.ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !

19.அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !

20.எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !

எம்.ஜி.ஆர்.  பெற்ற விருதுகள்....

பாரத் இந்திய அரசு 1971,
பாரத் ரத்னா இந்திய அரசு 1988,
டாக்டர் பட்டம்  சென்னை பல்கலைக்கழகம் 1983,
கௌர டாக்டர் பட்டம் அரிசோனா பல்கலைக்கழகம், அமெரிக்கா 1974,
அண்ணா விருது தமிழக அரசு 1971,
சிறந்த நடிகர் இலங்கை அரசு 1968,
ரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல்பரிசு - சிங்கப்பூர்ரசிகர்கள் 1971 ரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல் பரிசு - இந்திய அரசு1971,
மலைக்கள்ளன் சிறந்த நடிகர் இரண்டாம் பரிசு - இந்திய அரசு 1954, காவல்காரன் சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு 1967,
குடியிருந்த கோயில் சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு 1968, அடிமைப்பெண் சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு 1969,
எங்க வீட்டுப் பிள்ளை  சிறந்த நடிகர் ஃபிலிம் ஃபேர் வருது, 1965
அடிமைப்பெண் சிறந்த படம், முதல்பரிசு,ஃபிலிம்ஃபேர்விருது. 1969
உலகம் சுற்றும் வாலிபன் சிறந்த படம், ஃபிலிம் ஃபேர் விருது 1973

-சத்தியஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Anonymous said…
nalla padhivu....
  • இங்கிலாந்தில் குழந்தை பெற்ற ஆண் தாய்? - தந்தை?
    15.02.2012 - 0 Comments
    இங்கிலாந்தை சேர்ந்த 30 வயது ஆண் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண் ஆக மாறினார். அப்போது அவர் தனது…
  • நோக்கியா நிறுவனத்தின் தில்லுமுல்லுகள்
    07.05.2014 - 0 Comments
    கையளவு செல்பேசிக்கு பின்னால் கடலளவு கொள்ளை நடக்கிறது. நாம் பயன்படுத்தும் நோக்கியா செல்பேசி நிறுவனம் நம்மை…
  • நானும்
    14.02.2014 - 1 Comments
    இதுவரை எத்தனையோ நடிகர்கள்,நடிகைகள், இயக்குனர்களின் மரணமடைந்த போது ஏற்பாடத இனம்புரியாத ஒரு சோகம் பாலு…
  •  சுந்தரபாண்டியன். ஸ்டில்கள் + பாடல் இலவச டவுன்லோடு செய்ய
    10.09.2012 - 2 Comments
    போராளி படத்துக்குப் பிறகு சசிகுமார் நடிக்கும் புதிய படம் சுந்தரபாண்டியன். கும்கி படத்தில் நடித்த லட்சுமி…
  •   ஆயிரக்கணக்கான பறவைகள்  தற்கொலை
    25.06.2016 - 0 Comments
    தொழில் அதிபர் குடும்ப த்துடன் தற்கொ லை. குழந்தை களுக்கு விஷ்ம் கொடுத்து கொ ன்றுவிட்டு தாயும் தற்கொ லை.…