கருவாடும் - சுடுகாடும்






















ஏய்
மீனவ நண்பா
வாழ்க்கையென்னும்
கடலை நீந்திக்
கரை சேர்ந்தவன்
வெற்றியாளன்....


ஆனால் நீயோ
கடலையே வாழ்க்கையாய்
கொண்டவன்

எங்களுக்கு
கடலுக்குள் எல்லை இல்லை

ஆனால் ...
உனக்கு கடலின்
எல்லையே தொல்லை

எப்போதும் நீதான்
எங்களைப் பிடித்துக்கொண்டு
செல்வாய் கரைக்கு...

இப்போது
உன்னையல்லவா
பிடித்துக்கொண்டு
செல்கிறார்கள் சிறைக்கு...





















எங்களை
காப்பாற்றத்தான்
யாருமில்லை
உன்னையுமா ?....

கடலை விட்டு
கரைக்கு வந்தால் தான்
நான் கருவாடு
ஆனால்
உனக்கு
கடலே சுடுகாடு....

மே.இளஞ்செழியன்


உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

  • எனது ஊரில் துப்பாக்கி படத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
    16.11.2012 - 6 Comments
    நேற்று எனது ஊரில் ( மதுரை மாவட்டம் திருமங்கலம்) துப்பாக்கி படம் இரவு காட்சி ஓடிக்கொண்டிருந்த…
  • பிரபஞ்ச ரகசியமும் - நோபல்பரிசும்
    05.10.2011 - 1 Comments
    பிரபஞ்சம் விரிவடைவது தொடர்புடைய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான 2011ம்ஆண்டுக்கான  நோபல் பரிசு…
  • ஏமாந்து போன கமல்
    02.01.2013 - 3 Comments
    விஸ்வரூபம் எடுத்துவிட்ட கமலை பற்றி செய்திகள் தினம்,தினம் வந்து கொண்டிருக்கின்றன.விஸ்வரூபம் பிரச்சனை…
  • வைகோ என்னும்  தீர்க்கதரிசி...
    01.04.2014 - 0 Comments
    வைகோ  நல்ல அரசியல் தலைவர். இலங்கையாகட் டும்,முல்லை பெரியாறு பிரச்சனையாகட்டும் முதல் குரல் அவருடையதாக…
  • திருப்பறங்குன்றம்- ஆன்மீகம் தாண்டிய  புதிய அனுபவம்
    01.11.2011 - 8 Comments
    இது ஆன்மீக அனுபவமல்ல. திருப்பறங்குன்றம் என்றாலே கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பக்தர்களுக்கு ஆன்மீகத்தை சரியாக…