எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்கிறது நண்பன்


நண்பன் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி என்னவென்றால் உன்னுடைய அறிவு, திறமை போன்ற சமாச்சாரங்கள் உன்னில் இருந்து வெளிப்பட்டு உன்னை உயர்த்தவேண்டுமே தவிர, படிப்பு என்ற பெயரில் உனக்குள் திணிக்கப்படக்கூடாது என்பதுதான்.

கல்லூரி முடிந்து சில வருடங்கள் கழித்து தொலைந்த நண்பனைத் தேடுகிற இரண்டு பேர் ஜீவாவும் ஸ்ரீகாந்தும். காரணம் , அந்த நண்பன் அவர்களின் வாழ்க்கையையே மாற்றி வைத்திருக்கிறான்… கூடவே சத்யன் அதே ஆளைத் தேடி – ஆனால் பழி தீர்க்கும் நோக்கத்தோடு
இனிமையான கல்லூரி சூழல். குறும்பு கொப்பளிக்க அறிமுகமாகிறார் விஜய். கூடவே ஜீவா ஸ்ரீகாந்த்.. ஸ்ரீகாந்த் வாழ்க்கையில் தன் கனவுகளை தன் அப்பா அம்மாவிற்காக தியாகம் செய்து இஞ்சினீரிங்க் படிக்க வருபவர். ஜீவா மிடில் கிளாஸ் குடும்ப அழுத்தத்தில் தத்தளிப்பவர். விஜய், பெரிய பணக்காரரின் வாரிசாக கவலையே இல்லாமல் கல்லூரியில் வலம் வருபவர்.
கொடுங்கோல் பிரின்ஸ்பலாக சத்யராஜ்.


அவரின் அழகு மகளாக இலியானா. பிரின்சிபாலுக்கு ஜால்ரா போடும் மாணவனாக சத்யன். இப்படி ஒரு சூழலில் , இவர்களுக்கு வரும் பிரச்சினைகளை விஜய் தனது அநாயாசமான விட்டேத்தியான ஸ்டைலில் தீர்க்கிறார். அவர்களின் மதிப்பை பெறுகிறார். கூடவே சத்யராஜ் மற்றும் சத்யனின் எரிச்சலையும். அதெல்லாம் மீறி தன் நண்பர்களை காப்பாற்றி எல்லாரும் டிகிரி வாங்குகிறார்கள்… பின் விஜய் காணாமல் போகிறார்… அவரைத் தேடித் தான் இவர்கள்.
ஆனால் அங்கே போய் பார்த்தால் விஜய் பெயரில் இன்னொருவர்… அவர் தான் ஒரிஜனல் பணக்காரரின் மகன்.. விஜய் அவருக்கு சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுக்க வந்த பினாமி எனத் தெரிகிறது….
மீண்டும் தேடல்… இடையில் இலியானாவுக்கு நடக்க இருந்த திருமணத்தையும் காலி செய்து அவரையும் கூட்டிக் கொண்டு விஜயைத் தேடுகிறார்கள்…
கடைசியில் தங்கள் நண்பனை அவர்கள் சந்தித்ததுன் அந்த நண்பன் என்னவாக இருந்தான் என்பதும் தான் க்ளைமேக்ஸ்…


முழுக்க இளமை, கலர் ஃபுல், துள்ளலுடன் இருந்தாலும், படம் முழுக்க‌ நாம் உணர முடியாத ஒரு  மென் சோகம் இழையோடிக்கொண்டிருக்கும். அந்த இழைதான் படத்தின் உயிர் நாடி. அது மிகைப்படாமல் பார்த்துக்கொண்டது இயக்குனரின் திறமை.
 மனோஜ் பரமஹம்சாவின் கேமிராவை பற்றி சொல்லவேண்டுமென்றால் கலர் ஃபுல், கலக்கல் என்று இரண்டு வார்த்தையில் சொல்லிவிடலாம். ஹாரிஸின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்கிறது. ரீரிக்கார்டிங்கிலும் தூள் கிளப்பியிருக்கிறார். படத்திலிருக்கும் துள்ளல் ரீரிக்கார்டிங்கிலும் இருக்கிறது. ஆண்டனியின் கத்திரியில் இருக்கிறது நாசூக்கு.
 சங்கர் மற்றும் மதன் கார்க்கியின் வசனங்கள் கூர்மை ஆனால் முக்கியமான வசனங்கள் வரும் காட்சியில் சற்றே அழுத்தம் குறைவாக இருப்பது மிக குறைந்த அளவில் தெரிகிறது. பாடல் காட்சிகளில் இருக்கும் ப்ரம்மாண்டம் சங்கரின் கிளிஷேக்கள், ஆனால் அதிலும் புதுமை செய்து கைதட்டல்களை வாங்கிக்கொண்டார். லொகேசன்கள் மிக அருமை. எல்லா கதாபாத்திரங்களும் மனதில் பதிகின்றன., எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்கிறது நண்பன்.

 விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பற்றி ஸ்ரீகாந்த் .

 எந்த பந்தாவும் இல்லாம ரொம்ப எளிமையானவர் தான் விஜய்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது. படத்தில் அவரோட டெடிகேஷன், அந்த கடின உழைப்பு என்னை பிரமிக்க வச்சிருக்கு. நெருடல் இல்லாத நடிப்பு, சின்சியாரிட்டி தான் விஜய்யை இந்த அளவிற்கு கொண்டு போயிருக்குன்னு நினைக்கிறேன். நண்பன் படத்தில் அவருடன் நடித்தது நல்ல அனுபவத்தை தந்தது. “என் ப்ரெண்ட போல யாரு மச்சான்…” என்ற பாட்டை கிட்டத்தட்ட 25 வருஷ பழைய வாட்டர் டேங்கில் வைத்து சூட் பண்ணினோம். அங்கு சூட்டிங் நடந்த அனுபவத்தை இப்ப நினைச்சாலும் பயமா இருக்கு. படத்தோடு முதல் சாங்கும் அதுதான். கிட்டத்தட்ட 14நாட்கள் சூட்டிங் நடந்தது. சூட்டிங் ஆரம்பிக்கும் வரை ரொம்ப அமைதியா இருப்பார் விஜய், ஆனால் சூட்டிங் ஆரம்பிச்சுட்டா அந்தகாட்சியில் பின்னி எடுத்திடுவார். ரொம்ப ஹோம்வொர்க் பண்ணக்கூடியவர். அதனால் விஜய்யை பார்க்கும் போதெல்லாம் ரொம்ப வியந்து பார்ப்பேன் என்கிறார்.

வெள்ளிக்கிழமை “நம்பிக்கை”யை உடைத்த நண்பன்!


வெள்ளிக்கிழமை வெளியிட்டால்தான் படம் நன்றாகப்போகும் என்ற நம்பிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழ்த் திரைப் படத்தை உலுக்கி வந்தது. இந்த நம்பிக்கையின் மூலம் எது என்று கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், வெள்ளிக்கிழமை வெளியானாலும் ரசிகர்களைக் கவராவிட்டால் தோல்விதான் என்பது தொடர்ந்து நிரூபணமாகி வந்துள்ளது.மேலும், வெள்ளிக்கிழமை வெளியாகி அந்தப் படம் நன்றாக இருந்து, ரசிகர்களைக் கவர்ந்துவிட்டாலும், அப்படம் தொடர்ந்து ஓடுவதை பெரிய பட நிறுவனங்கள்தான் தீர்மானித்தன. பெரிய பட்ஜெட் படம் வந்துவிட்டால், வெற்றிப்படம் கூட திரையரங்குகளிலிருந்து வெளியேற வேண்டியதுதான். இருந்தாலும், வெள்ளிக்கிழமை நம்பிக்கை திரையுலகத்தாரிடமிருந்து அகல
வில்லை.இந்நிலையில்தான் பெரிய பட்ஜெட் படமான நண்பன் தைரியமாக வியாழக்கிழமையன்று வெளியாகியுள்ளது.
தொகுப்பு
சத்யஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Anonymous said…
unga vimarsanam nalla irkkungna. naan seekkiram nanban paakkanm naa!
  • மீண்டும் தேர்தல் திருவிழா
    03.10.2011 - 0 Comments
    சட்டமன்ற தேர்தலில் ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்ட மை அழிவதற்கு முன்னால் தமிழகத்தில் மீண்டும் தேர்தல் திருவிழா…
  • நாளை தவறவிடதீர்கள் ... தவறினால் 105 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் + வீடியோ இணைப்பு
    05.06.2012 - 7 Comments
    ஆம் நண்பர்களே... நாம் வாழும் தற்போதைய காலத்தில் வானில் ஒரு அற்புதம் நிகழவிருக்கிறது.பார்க்க தவறவிட்டால்…
  • வடிவேலு vs அரசியல்
    11.03.2012 - 0 Comments
    கிழவன் இன்னும் குமரனாகலையா’ என்று எம்.ஜி.ஆரைப் பற்றி நாகேஷ் கேட்டதாகச் சொல்வார்கள். ‘நினைவின் தாழ்வாரங்கள்’…
  • “49 ஓ” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், -  கவுண்டமணி
    08.09.2015 - 2 Comments
    மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு 49 ஒ - படத்தில் நடித்திருக்கிறார் கவுண்டமணி. செந்தில் - கவுண்டமணி காமடி மறக்க…
  • பிரபாகரன் மகனை அருகில் நிற்க வைத்துச் சுட்டனர்:  சேனல்-4  அதிர்ச்சி  தகவல்
    17.03.2012 - 1 Comments
    “இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனை அருகில் நிற்க வைத்துச் சுட்டுக்…