தமிழ்திரையுலகின் வெள்ளிக்கிழமை “ராசி” சென்டிமென்ட்


அண்மை க்காலங்களில் வெள் ளிக் கிழமைகளில் படங்களை வெளியிடும் வழக்கம் அதிகரித் துள்ளது.அந்த நாளில் வெளியாகும் படங்கள் வெற்றிப்படங்களாக அமையும் என்பது திரையுலகில் உள்ள பெரும் பாலானவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட அனைத்துப் படங்களுமே வெள்ளிக்கிழமைகளில்தான் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்படி வெளியாகும் படங்களில் பெரும்பாலானவை வந்த வேகத்தில் திரையரங்குகளிலிருந்து வெளியேறி விடுகின்றன. இருந்தாலும், வெள்ளிக்கிழமை விசுவாசிகளின் எண்ணிக்கை
குறையவில்லை.கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று மம்பட்டியான், உச்சிதனை முகர்ந்தால், மௌன குரு மற்றும் யுவன் ஆகிய படங்கள் வெளியாகின. இத்தனைக்கும் மம்பட்டியான் படம் ஏற்கெனவே பெரும் வெற்றியைப் பெற்ற படமான மலையூர் மம்பட்டியான் என்ற படத்தின் மறு உருவாக்கம்தான். அப்படியும் வெள்ளிக்கிழமை வெளியிட்டால்தான் மீண்டும் வெற்றி என்று நம்பியிருக்கிறார்கள்.மூடநம்பிக்கைகளை வெள்ளித்திரையிலேயே சாடும் சத்யராஜ் மற்றும் சீமான் போன்றவர்கள் நடித்து வெளியாகியுள்ள உச்சிதனை முகர்ந்தால் படமும் இதிலிருந்து தப்பிக்கவில்லை. ஒரு வாரமாகியும் இந்தப்படங்களில் எதுவும் மக்கள் மத்தியில் பேசப்
படும் படமாக அமையவில்லை. வித்தியாசமான படத்தைத் தருபவர் என்று பரவலாகப் பெயர் எடுத்திருக்கும் நடிகர் விக்ரமின் படமான ராஜபாட்டை (டிச.23) வெளியானது. அதுவும் வெள்ளிக்கிழமை ராசிக்குத் தப்பவில்லை.
-சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

  • பாலுமகேந்திராவின்
    23.02.2014 - 1 Comments
    25 வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட ஒருபடம் தற்காலத்திற்கும் அதன் காட்சிகள் கச்சிதமாய் பொருந்துகிறது…
  • செவ்வாய் கிரகம் சென்று வந்தேன்...
    06.10.2015 - 0 Comments
      நேற்று மதியம் 2.40 மணியிலிருந்து 5 மணி வரை செவ்வாய் கிரகத்தில் தான் இருந்தேன். த மார்ஷியன் படம்…
  • கண்ணாடிபோல் உங்கள் வாழ்க்கை...
    20.09.2022 - 0 Comments
    குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார். "என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட…
  • ஜிகர்தண்டா... வித்தியாசமான சுவை
    03.08.2014 - 0 Comments
    எங்க ஊர் ஸ்பெஷல் ஜிகர்தண்டா.காலை காட்சிக்கு எப்போதையும் விட கூடுதலாக கூட்டம். நம்ம  ஊர்ல படம்…
  • நாளை முதல் நீங்கள்,நான் ..800 கோடியில் ஓருவர்
    14.11.2022 - 1 Comments
     நாளை முதல் நாம் 800 கோடியில் ஒருவர் ஆகிவிடுவோம்..நாளை உலகத்தின் மக்கள்தொகை 800கோடியாக உயருகிறது.நாம்…