30 டிச., 2011

2011 கடந்து வந்த பாதையும்... - கடக்க வேண்டிய துரமும் 2012,2013....


புத்தாண்டை வரவேற்க எல்லோரும் தயாராக இருப்பீர்கள். ''தண்ணீ'' (அல்கஹால்) அடித்து ஆட்டம் பாட்டமாக வரவேற்பதுதான் பெரும்பாலனவர்களின் வழக்கம். இது சரியா?.
புத்தாண்டு துவங்குகிற நேரத்தில் உற்சாகமாக இருக்க வேண்டும் என்பதில் தவறில்லை. மது அருந்திவிட்டு கூச்சல் போடுவதும்,வாகனங்களை தாறுமாறாக ஓட்டுவதும் சரியா?. கடந்த 2011ம் ஆண்டையும் இப்படித்தான் வரவேற்றோம். ஆனால் ஆண்டு முழுவதும் சந்தோசமாக இருந்தோமா? புதிய ஆண்டில் நுழையும் போது என்ன செய்யலாம்?.
             இந்த கணிணியுகத்தில் நாம் தனிமனிதர்களாக இருக்க முடியாது. நம்மை சுற்றியிருக்கும் உலகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் நம்மை பாதிக்கிறது. 2011 ம் ஆண்டில் உலக அளவில், இந்திய அளவில், தமிழக அளவில் இப்படி நாம் வாழ்கின்ற நாடுகளை பொறுத்து, நடக்கின்ற சம்பவங்கள் நம்மை ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கிறது. கடந்த ஆண்டில் சிறந்த மனிதர்களை,உறவுகளையும் பறிகொடுத்திருப்போம்,சில சர்வாதிகாரிகள் அழிக்கப்பட்டிருப்பார்கள், அவற்றை தவிர்த்து 2011 ல் நடந்த பொதுவான சில சம்பவங்களை பார்க்கலாம்...

2011ல் உலக நிகழ்வுகள்

ஜனவரி 11 ல் பிரேசிலில் புயல் மழைக்கு 600 பேர் பலியானதில் தொடங்கி, மார்ச் 11ல் ஜப்பானில் பூக ம்பம், சுனாமி,அணுஉலை வெடிப்பில் 1700க்கும் மேற்பட்டோர் பலி,மேலும் குண்டு வெடி ப்புகள், வன்முறை களால் லட்சம் பேர் பலியாகியி ருப்பார் கள். கடந் த ஆண்டு ''மக்கள் புரட்சிகளின் ஆண்டு'' என்று சொல்லாம் ஜனவரி 14ல் துனிசியாவில் துவங்கி பாகிஸ்தான்,எகிப்து,ஏமன்,லிபியா என தங்கள் நாட்டு அரசுகளை எதிர்த்து பலலட்சக்கணக்கான மக்களின் போராட்டம் நடைபெற்றுது. நாம் தமிழர்கள் என்ற முறையில் இலங்கை தமிழர் பிரச்சனை முடிவுக்குவராத, அதே நேரத்தில் இலங்கை தமிழ்தலைவர்கள் பலபிரிவுகளாக இப்பது வருத்ததிற்குரிய நிகழ்வாக தொடர்கிறது.

2011ல் இந்திய நிகழ்வுகள் 

இந்தியாவை பொறுத்தவரை பெட்ரோல் விலை உயர்வும், இந்தியவை சுற்றியுள்ள நாடுகளை விட ஏன் அமெரிக்காவை விடவும் அதிகரித்துவரும் பெட்ரோல் விலை,விலைவாசி உயர்வு,சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என சாதாரண மக்களை பாதிக்கின்ற பிரச்சனைகள், மாவோயிஸ்ட் தாக்குதல்கள், ஸ்பெக்டரம் ஊழலில் தமிழக எம்.பிக்களான அ.ராசா,கனிமொழி தொடங்கி பல அரசியல்வாதிகள்,அதிகாரிகள் என நாட்டை ஏமாற்றிய கும்பல்கள், ஊழலுக்கு எதிரான அன்னாஹாசாரே போராட்டம்,ஆந்திராவில் தனிதொழுங்கான போராட்டம், கர்நாடகாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு,கேரள - தமிழத்தின் முல்லைப்பெரியாறு பிரச்சனைகளும், இந்த பிரச்சனைகளுக்கு எதிராக மக்களின் போராட்டம் என உலக நிகழ்வுகளை போலவே இந்திய நிழ்வுகளும் மக்கள் போராட்டக் களமாக இருந்தது.தனது பதவிக் காலம் முழுவதும் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திலேயே கழித்து, இந்திய மக்களை மேலும் பிச்சைக்காரர்களாக மாற்றிவிட்டு எனக்கு எதுவும் தெரியாது என பதிலளிக்கும் பிரதமர் மன்மோகன்சிங் என தகுதியற்ற அரசியல் தலைவர்களோடு தடுமாறும் இந்தியா.

2011 தமிழக நிகழ்வுகள்

தமிழகத்தை பொறுத்தவரை 2011ம் ஆண்டு மிகப்பெரிய மாற்றங்களை கண்ட ஆண்டு எனலாம். ஆட்சி மாற்றம், பரமக்குடி துப்பாக்கி சூடு, தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினர், அதற்கான போராட்டம், 2011 தேர்தல் திருவிழாவில் கட்டுக்கட்டாக பிடிக்கப்பட்ட, கணக்கில் வராத பணம் பறிமுதல்,தொடரும் மின்வெட்டு,நேற்றைய ஆளும் கட்சியான தி.மு.க. ஸ்பெக்டம் ஊழலில் சிக்கிதவிக்கிறது என்றால் இன்றைய ஆளும் கட்சி தலைவியான ஜெயலலிதாவுக்கு வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கு என தமிழக மக்கள் ஊழல் ஆட்சியாளர்களின் கையில் சிக்கி தவிக்கிறார்கள்.2011ல் தமிழகம் கண்ட மிகப்பெரிய போராட்ட களங்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிப்பு,மற்றும் தென் தமிழகத்தின் ஜீவாதாரமாக உள்ள முல்லைப்பெரியாறு பிரச்சனையில் கேரள அரசின் தவறான போக்கை கண்டித்து மக்களின் போராட்டங்கள் .
         ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது 2011 ம் ஆண்டு போராட்டக் களங்களின் ஆண்டு எனலாம். உலகமுழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார பிர்ச்சனைகள், இந்தியா அளவில் நடக்கின்ற சம்பங்களும் நம்மையும் பாதிக்கின்றன. இதே போல நம் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த தவறுகள்,தோல்விகள்,வெற்றிகளை கணக்கில் எடுத்துக்கொண்டு கடந்துவந்த பாதையிலிருந்து,கடக்கவேண்டியதுரத்தை கடப்போம்

தமிழ்மணம், சகபதிவர்கள், வாசகர்களுக்கு
 ஆங்கிலபுத்தாண்டு வாழ்த்துக்கள்.

-அ.தமிழ்ச்செல்வன்
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...