மீண்டும் தேர்தல் திருவிழா


சட்டமன்ற தேர்தலில் ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்ட மை அழிவதற்கு முன்னால் தமிழகத்தில் மீண்டும் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. கடந்த தேர்தலை விட இந்த உள்ளாட்ச்சி தேர்தலில் கட்சிகள் தனித்தனியாக நிற்பதால் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் அதிகம். தீபாவளிக்கு சில தினங்கள் இருந்தாலும் கூட நகர்,மற்றும் கிராமபகுதிகளில் திருவிழா கூட்டம் போல மக்கள் வேட்பாளர்களின் பின்னால் சுற்றுக்கொண்டிருக்கிறார்கள்.பிரியாணிப் பொட்டலம், குவாட்டர் பாட்டில், சரவெடிகள் என உள்ளாட்சி தேர்தல் களைகட்ட தொடங்கிவிட்டது.மேலும் கவிஞர் மு.கி - கவிதை உள்ளாட்சி தேர்தலை பற்றி ......


”உள்”ளாட்சி தேர்தல்
வெளியே சொன்னால்..வெட்கக்கேடு.
முன்மொழிந்தால்..முன்னூறு ரூபா..
வழி தொடர்ந்தால்..
“வா” குவாட்டர் கட்டிங்...
”தலைவர்” ஒரு தரம்..ரெண்டு தரம்..
மூணு தரம்...மூணு லட்சம்..
காவல் நிலையத்துல..தினமும்
கறிச்சோறு மணக்குது..
திருடனை பிடிச்சு..சலிச்சுபோய்..
தேர்தல் பிரியாணி பொட்டலத்தை
மடக்கிப்பிடிக்க..
ரெய்டுக்கு கிளம்பும் ஏட்டய்யா..
பார்சலுக்கு..டிபன் கேரியருடன்..
5வருசமா..காணாமல்போன
 கவுன்சிலரின் கள்ளத்தனம்
 மீண்டும் போஸ்டரில் கலர்கலராய்..
அரங்கேறியது..
நொந்துபோன வாக்காளர்களுக்கு..
வெந்த முட்டையும்..,
வறுத்த கறியும்..
5வருச கோபத்தை..
குவாட்டருக்கும்..கோழிபிரியாணிக்கும்
அடமானம் வைத்தான் பொதுசனம்.

-முகி, திருமங்கலம்.

கருத்துகள்