7- மாறுபட்ட தோற்றங்களில் விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை


தமிழ் சினிமாவில் இரண்டு பாதைகள் உள்ளன, கதையம்சத்துடன்,
யதார்த்தமாக, கதையின் கதாபாத்திரத்தின் தன்மைக் கேற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு நடிக்கின்ற சினிமா. மற்றொன்று முழுக்க முழுக்க வியாபார நோக்கத்தோடு 4 பாட்டு, 4பைட்டு, கவர்ச்சி காட்சிகளில் எடுக்கப்படுகிற சினிமா. இந்த இரண்டு பாதைகளையும் இணைக்க பல பரிசோதனைகளை மேற்கொண்டு ஒரளவு  வெற்றி பெற்றவர் நடிகர் கமலஹாசன்.இவரின் இந்த பாதையை பின்பற்றுகின்ற நடிகர்கள் என எடுத்துக்கொண்டால் நடிகர் சூர்யாவும், விக்ரமும் தான். சூர்யாவின் 7ம் அறிவு தீபாவளிக்கு வெளிவருக¤றது.விக்ரம் 7 மாறுபட்ட தோற்றங்களில் நடிக்கும் ராஜபாட்டை டிசம்பர் மாதம் வெளிவருகிறது.

                             ''வெண்ணிலா கபடிகுழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை''  போன்ற படங்களுக்கு பின் சுசீந்திரன் இயக்கும் நான்காவது படம் ''ராஜபாட்டை''.பி.வி.பி. சினிமா புரொடக்ஷன் தயாரிக்கிற படம்.''தில்,தூள், சாமிக்கு'' பிறகு விக்ரம் நடிக்கும் ஆக்ஷன் படமிது. இதில் விக்ரம் ''அனல் முருகன்'' என்கிற ஜிம்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆறடி உயரமுள்ள அறிமுக நாயகி திக்ஷா சேத் ஆந்திரமுகம். இயக்குனர் கே.விஸ்வநாத் முக்கிய வேடமேற்றுள்ளார். சிறுத்தை புகழ் அவினாஷ், நான் மகான் அல்ல வில்லன் அருள்தாஸ், கஜினி வில்லன் ப்ரதீப்ரவாத், தம்பி ராமையா, மயில்சாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ராஜபாட்டை கதை என்ன?
இன்று மக்களுக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பிரச்சினை நிலமோசடி, நிலஅபகரிப்பு குற்றங்கள், இவற்றுக்கு பின்னே இருப்பவை பெரிய மாஃபியா கும்பல்கள். இப்படிப்பட்ட நில மோசடி கும்பலை மையமாக வைத்து உருவாகியிருக்கும் கதைதான் ராஜபாட்டை. தாதாக்களின் பின்னே பேச வசனமின்றி நிற்பவர்கள் ஜிம்பாய்ஸ், அப்படிப்பட்ட ஜிம்பாயாக விக்ரம் நடிக்கிறார். நாயகி தீக்ஷா ஐ.டி கேர்ளாக வருகிறார்.
                எளிமையானதாக, யதார்த்தைத் தொடும் கதைகளை படமாக்கிய சுசீந்திரன் ஒரு மாறுதலுக்காக இப்படத்தை பிரமாண்டமாக கமர்ஷியல் மசாலாவாக இயக்குகிறார்.தெய்வத்திருமகள் படத்துக்கு பின் விக்ரமுக்கும் ஒரு மாற்றமான படம். இயக்குனருக்கும், நாயகனுக்கும் அவர்களது முந்தைய படத்தின் பிம்பத்தை புரட்டிப்போடும் படமாக இது இருக்கும். இந்த படத்திற்கு இசை யுவான் சங்கர்ராஜா. ஒளிப்பதிவு மதி (நான் மகான் அல்ல) கலைஇயக்குனர் ராஜீவன், வசனம் பாஸ்கர்சக்தி,படத்தொகுப்பு காசிவிஸ்வநாதன் என்று இயக்குனர் சுசீந்திரனின் டீம் இதிலும் உள்ளது.
                விக்ரம் மிக இளமையான தோற்றத்தோடு, வித்தியாசமான கெட்டப்புகளில் வருகிறார்.7 மாறுபட்ட தோற்றங்களில் விக்ரம் நடிக்கிறார்.இது முழுக்க,முழுக்க ஆக்ஷன திரைப்படம். அதை காமெடியாக, கமர்ஷியலாக உருவாகிவரும் அதிரடி திரைப்படம்தான் ராஜபாட்டை.

             
 ஒரு சமுகப்பிரச்சனையின் பின்னணியில் விக்ரமுக்கு மாறுபட்ட தோற்றம், அதே சமயத்தில் வியாபார வெற்றி இரண்டையும் இணைந்து பிரம்மாண்ட செலவில் உருவாகிவரும் ராஜபாட்டை டிசம்பர் அல்லது பொங்கல் வெளியீடாக வரலாம்.

-சத்யஜீத் ரே

கருத்துகள்