கற்றல் என்பது இனிப்பானது


திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில்யுரேகா கல்வி இயக்கத்தின் சார்பில், வட்டார வளமையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க நடத்திய கல்விச்சிந்தனை அரங்க கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலசபாக்கம் வட்டார வள மைய மேற்பார்வையாளர்
 ( பொறுப்பு ) வே.  இராஜேந்திரன் தலைமையேற்றார், கலசபாக்கம் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இ.சிராஜ், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அ.கலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட மேலாளர் அ.சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.


கலசபாக்கம் ஒன்றியத்தில் வட்டார வள மைய மேற்பார்வையாளராகப் பணி  செய்து ஓய்வு பெற்ற கண்ணன் அவர்களுக்கு பாராட்டு நிகழ்வும்  நடைபெற்றது.

'சிந்தனையின் துவக்கமே கல்வி'  எனும் தலைப்பில் சிறப்புரையாற்றிய  எஸ்.எஸ்.ஏ.  திட்ட மாவட்ட உதவிக் கல்வி அலுவலர் .மதியழகன் பேசும்  போது,   ”கல்வி எனும் வெளிச்சத்தாலதான் உலகில் நல்ல பலமுன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

எந்தக் குறையுமின்றி நம் பள்ளிக்கு வரும் குழந்தையால் நிச்சயம் படிக்கவும்  முடியும்.ஒரு குழந்தைக்கு படிக்கவே வராது என்று சொல்ல யாருக்கும் இங்குஅனுமதியில்லை.

கற்றல் என்பது இனிப்பானது.  நாம் அதை கசப்பானதாக மாற்றி விடுகிறோம்.  எதையும் அன்பால்,  மென்மையால் சொல்வதை விடுத்து,  வன்மையான சொற்களை கைக்கொள்பவர்களாக மாறிப்போய் விட்டோம்.

குழந்தைகளை அவர்களின் இயல்பிலேயே வளர விடுவதில்லை.  எதைப் பார்த்தாலும் கேள்வி கேட்கிற குழந்தையை,  வகுப்பறைக்குள் உட்கார வைத்து 'கையைக் கட்டு'  'வாயைப் பொத்து'  என அடக்கி ஒடுக்காமல் அவர்கள் அச்சமின்றி கேள்விகளைக் கேட்கிற சிறந்த மாணவனாக ஆசிரியர்கள் குழந்தைகளை உருவாக்க வேண்டும்.

பல சவால்கள் நிறைந்த இந்த உலகில் கிடைக்கிற வாய்ப்புகளை சரியாக  பயன்படுத்தி, வெற்றியாளர்களாக இன்றைய மாணவர்களை வளர்த்தேடுப்பதே கல்வியின் முக்கிய கடமை” என்று குறிப்பிட்டார். நிகழ்வை யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.முருகேஷ்
ஒருங்கிணைத்தார். திட்ட மேலாளர் அப்துல்மஜீத் நன்றி கூறினார்.

Comments