20 செப்., 2011

அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள்


மனிதர்களின் பழக்கவழக்கங்கள¤ல் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்கள், நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, இயற்கைக்கு மாறான சுற்றுச்சுழல் நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கிறது.

             உருவத்தில் சிறிதாக அழகான தோற்றம் கொண்டு சுறுசுறுப்பாக பறக்கும் சிட்டுக்குருவி,காகங்களை போல மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கெண்டு வாழ்ந்திடும் அறிவுபூர்வமான பறவை. கூரைவீடுகள், ஓடுவேயப்பட்ட கூரைகளில் கூடுகட்டி முட்டையிடும் பெண்குருவிகளுக்கு பக்கபலமாக ஆண்குருவி கூடவே இருந்து குஞ்சு பொரித்து இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது.வீட்டு தோட்டங்களில் உள்ள புழு, பூச்சிகளை சிட்டுக்குருவிகள் உண்பதால் விவசாயகளின் நண்பன் என அழைக்கப்படுகிறது. பலசரக்கு கடைகள், உணவு தானிய குடோன்கள் முன்சிதறிக்கிடக்கும் தானியங்களை உண்டு உயிர்வாழ்ந்து வருகிறது.

         இந்நிலையில் வெளிக்காற்று வீட்டுற்குள் வரமுடியாதபடி வீடுமுழுவதும் ஏ.சி செய்யப்பட்ட வீடுகளில் குருவிகள் கூடிகட்டி குடியிருக்க முடியாமல் போய்விட்டது. அதே போல் பெட்ரோலில் இருந்து வெளியேறும் ``மீதைல் நைட்ரேட்'' எனும் ரசாயன கழிவு புகையால் காற்று மாசடைந்து குருவிகளை வாழவைக்கும் பூச்சிஇனங்களை அழித்துவிடுவதால் ஏற்படும் உணவு பற்றாக்குறையால் நகர்புறங்களில் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிந்து விடுகின்றன.அதே சமயம் வீட்டு தோட்டங்கள், வயல்வெளிகளில்  வீரியம்மிக்க பூச்சிகொல்லிகள் தொளிக்கப்படுவதால் பூச்சிகள் கொல்லப்பட்டு உணவின்றி குருவிகள் அழிகின்றன.மரங்கள் வெட்டப்படுவதாலும்,வறட்சி போன்ற பிற காரணங்களாலும் பசுமையான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்வது அதிகரித்து வருகிறது.
    இவற்றுக்கெல்லாம் மேலாக மகுடம் சூட்டியது போல மொபைல் போன் வருகைக்குபிறகு சிட்டுக்குருவிகள் 90 சதம் அழிந்துவிட்டன. தகவல் தொடர்புக்கு அமைக்கப்பட்டு வரும் மொபைல்போன் டவர்களிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு குருவியின் கருவை சிதைக்கிறது. அதையும் மீறி முட்டையிட்டாலும் கருவளர்ச்சியின்றி கூமுட்டையாக மாறி வீணாகிவிடுகிறது.திண்டுக்கல் மாவட்ட மலைபிரதேச கிராமங்களில் சொற்ப அளவில் காணப்படும் குருவிகள் மதுரை,தேனி,ராமநாதபுரம்,சிவகங்கை போன்ற மாவட்டங்களில் காணப்படுவது அரிதாகவே உள்ளது.

                  இதை தொடர்ந்து அழிவின் விளிம்பில் குறைந்த எண்ணிக்கையில் உலாவந்து கொண்டிருக்கும் சிட்டுகுருவிகளை காத்திடும் பொறுப்பு நாம் அனைவருக்கும் உள்ளது. சிறிய வீடாக இருந்தாலும் தோட்டங்களை அமைத்திடவேண்டும், பயிர்கள்,தாவரங்கள் மீது வீரியமிக்க பூச்சிமருந்துகளை தெளிக்காமல் இயற்கை பூச்சிகொல்லிகளை பயன்படுத்திட வேண்டும். குருவிகள் குடிக்க தண்ணீர், உண்பதற்கு தானியங்களை தோட்டத்திலும், மாடியிலும் தூவவேண்டும். பாதுகாப்பான இடங்களில் மண்பானையில் வைக்கோல் போட்டு வைத்தால் குருவிகள் கூடுகட்டி குஞ்சு பொறித்திட ஏதுவாக அமையும். இல்லாவிட்டால் சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து வருங்கால சந்தியினர் அருங்காட்சியகங்களில் சென்று பார்க்க வேண்டிய சோகம் ஏற்பட்டுவடும். பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது தானே?.


-ஜெ.எஸ்.செல்வராஜ்

கருத்துரைகள் எழுத......

ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்உங்கள் படைப்புகளை ... indrayavanam@gmail.com க்கு அனுப்புங்கள்- 
பேச: 9443180480 Related Posts Plugin for WordPress, Blogger...