மக்கள் புரட்சியின் இந்திய வடிவம் அன்னாஹசாரே


இந்திய திரைப்பட கதாநாயகர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியாவின்  ஒட்டுமொத்த கதாநாயகனாக மாறியிருக்கிறார் அன்னாஹசாரே.இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்தில் கமல்ஹசன் நடித்த இந்தியன் தாத்தா கதாபாத்திரம் ஊழல் செய்த தன் மகனையே கொல்லும் அளவிற்கு ஒரு அவதாரபுருசராக சித்தரிக்கப்பட்டிருக்கும்.அதை நிஜமாக்குகிற அவதாரபுருசராக இந்திய மக்களின் ஊழலுக்கு  எதிரான கோபத்தின் வடிவமாக ஹசாரே திகழ்கிறார்.
                           அகஸ்ட 15 இந்தியாவின் 65 சுதந்திரதினத்தன்று கொட்டும் மழையில் செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மன்மோகன்சிங் பேசியபோது,
                 ''ஊழலை ஒழிக்க அரசிடம் மந்திரகோல் ஏதும்இல்லை. லோக்பால் தேவைதான், ஆனால் எந்தவகையில் அது இருக்கவேண்டும் என்பதை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும்'' என்றார்.
அதற்கு முந்தைய தினம் இரவு சுதந்திரதின உரையாற்றிய குடியரசுத்தலைவர் பிரதிபாபாட்டீல்,
              ''ஊழல் புற்றுநோயைப் போன்றது, அதை ஒழிக்க ஒரேமருந்தோ, தீர்வோ இருக்கமுடியாது.நாட்டுக்கு உகந்த சட்டம் இயற்றும் வல்லமையும் அதிகாரமும் கொண்டது நாடளுமன்றம். அதன் பணிகளில் வெளியாட்கள் குறுக்கிட முடியாது, நாடளுமன்றம் போன்ற மக்கள் அமைப்புகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையிலோ,கண்ணியத்தை குலைக்கும் வகையிலோ அறிந்தும்,அறியாமலும் எவரும் ஈடுபடக்கூடாது'' என்றார்.
 செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப்முகர்ஜியோ, ''அன்னா அரசுக்கு மட்டும் சவால்விடவில்லை,ஒட்டுமொத்த நாடளுமன்ற அமைப்பையும் கேள்விக்குள்ளாக்கிறார்'' என்றார்.
 இவற்றிக்கு பதில¢ அளித்த ஹசாரே,
                ''இந்த அரசை கவிழ்க்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. ஆனால் மாற்றத்திற்கான எங்கள் போராட்டத்தால் இந்த அரசு வீழ்ந்தால் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை''என்றார்.
 
சுகந்தரதினம் முடிந்த மறுநாள்  அகஸ்ட 16 ல் அன்னாஹசாரேயையும் அவரது ஆதரவாளர்களையும் மத்திய காங்கிரஸ் அரசு கைது செய்தபோது, ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான போராட்டமாக திரும்பியது.ஊழலுக்கு எதிராகப் போராடுகிற ஒருவரை ஊழல் அரசு சிறையில் அடைத்த போது மக்கள் கோபம் கிளரிவிடப்பட்டது எனலாம். இந்த தாக்குதல் காரணமாக மக்களிடமிருந்தும், நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ் அரசு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.இந்தியாவின் 65கால சுதந்திரவரலாற்றில் மிகப்பெரிய ஊழல் மலிந்த அரசு இதுதான்.
                 ஊழல் இன்று ஒரு பெரும் பிரச்சனையாக உருவாகியிருக்கிறது. சமுகத்தின் அனைத்து தளங்களிலும் பரவி பாதிப்பை ஏற்படுத்துகிற ஊழலுக்கு என்ன காரணம்?
                   கடந்த 20 ஆண்டுகளாக தாராளமயமாக்கல் கட்டவிழ்த்துவிடப்பட்டு நவீன தாராளமயக்கல் கொள்கைகள் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து உயர் மட்ட ஊழல்கள் நிறுவனமயமாக்கப்பட்டது. சிறுநகரங்களில் நடைபெறும் சாக்கடைப் பணிகளோ அல்லது சாலை அமைக்கும் பணிக்கோ அந்தபகுதியின் கவுன்சிலருக்கு அவர் கேட்காமலேயே கமிஷன் சென்றுவிடுகிறது.இதே முறையிலேயே பெரும் முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கதிதனர் கூட்டின் காரணமாக மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுகின்றன.தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்குகூட்டணியின் ஏழாண்டு கால ஆட்சியிலும், பாஜக கூட்டணியின் முந்தைய ஆறாண்டு கால ஆட்சியிலும் பெரும் முதலாளிகளின் நலன்களுக்காக வளைந்து கொடுத்ததின் விளைவே ஊழல் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருப்பதற்கு காரணம்.
                               அன்னாஹசாரே பட்டினிப்போராட்டம் தொடங்கி 8நாட்களுக்கு பிறகு பொதுமக்களின் நிர்பந்தம் காரணமாக அரசு பணிந்துள்ளது. அவரது குழுவுடன் பேச்சுவாத்தையை தொடங்கியிருப்பது வரவேற்க்கதக்கது. ஹசாரேவின் போராட்டம் புதிய மாற்றத்தை தொடக்கி வைத்துள்ளது.எகிப்து, லண்டனில் வெடித்த மக்கள் புரட்சியின் இந்திய வடிவமே அன்னாஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம்.
               அ.தமிழ்ச்செல்வன்

Comments

நல்லா இருக்கு
Anonymous said…
த்க்க்க்க
  • ஆண்டுகள் 50 ஆனாலும் தீராத சோகம்...
    22.12.2014 - 1 Comments
    1000 பேர் பலி.... 50 பேர் காணாமல் போனார்கள். சுற்றுலா வந்த குழந்தைகள் 100 பேருக்கு மேல் ரயிலோ டு காணாமல்…
  • தி இந்து தமிழில் - எனது கட்டுரை
    16.11.2015 - 1 Comments
    எனக்குப் பிடித்த வீடு: இயற்கையின் வரவேற்பறை வாஞ்சையுடன் வரவேற்கும், இன்முகத்தோடு வழியனுப்பும் இடமான…
  • வானத்தில் இன்று இரண்டு நிலவு?
    27.08.2014 - 0 Comments
    ஆகஸ்ட் 27  (புதன்) இரவு வானத்தில் சந்திரனும் செவ்வாய்க் கோளுமாக இரண்டு நிலவுகள் தெரியும் என்று சமூக…
  • மோடியின் மெளனத்திற்கு கிடைத்த பரிசு...
    11.02.2015 - 0 Comments
    டெல்லி தேர்தல் இந்தியாவில் மட்டுமல்ல உலகமுழுவதும் மிகப்பெரிய அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியில்…
  • 7- மாறுபட்ட தோற்றங்களில் விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை
    07.10.2011 - 0 Comments
    தமிழ் சினிமாவில் இரண்டு பாதைகள் உள்ளன, கதையம்சத்துடன், யதார்த்தமாக, கதையின் கதாபாத்திரத்தின் தன்மைக் கேற்ப…